தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Cm Stalin : மகளிர் உரிமைத் தொகை - விண்ணப்பதிவு முகாமை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

CM Stalin : மகளிர் உரிமைத் தொகை - விண்ணப்பதிவு முகாமை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

Divya Sekar HT Tamil
Jul 24, 2023 10:31 AM IST

தர்மபுரியில் கலைஞர் உரிமைத் தொகைக்கான சிறப்பு முகாமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

தர்மபுரியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தர்மபுரியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

ட்ரெண்டிங் செய்திகள்

இத்திட்டத்தை செயல்படுத்துவதற்காக முதல் கட்டமாக 7000 கோடி ரூபாயை நடப்பு பட்ஜெட்டில் தமிழ்நாடு அரசு ஒதுக்கியதுடன் ஒரு கோடி மகளிருக்கு இந்த உரிமை தொகையை வழங்க திட்டமிட்டுள்ளது.

சென்னையில் வரும் இன்று முதல் ‘கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்’ பயனார்கள்கள் சேர்ப்பு முகாம் நடக்க உள்ளது. 20 ஆம் தேதி முதல் தெரு வாரியாக டோக்கன் மற்றும் விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. செப்டம்பர் மாதம் மகளிர் உரிமைத்தொகை திட்டம் தொடங்கப்பட உள்ள நிலையில், அந்த திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான ஆய்வு கூட்டங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடத்தப்பட்டு, அந்த திட்டத்தின் கீழ் பயன்பெறுவதற்கு தகுதியானவர்களை தேர்வு செய்ய சில வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டு, வெளியிடப்பட்டன.

கடந்த 7-ந் தேதி இந்த திட்டத்தை செயல்படுத்துவது குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக ஆலோசனையும் நடத்தினார். இந்த திட்டத்தின் வாயிலாக முதல்கட்டமாக சுமார் ஒரு கோடி மகளிர் வங்கி கணக்கில் மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத்தொகை நேரடியாக செலுத்தப்பட உள்ளது.

இந்த திட்டங்களை பெற மகளிர் விண்ணப்பங்களை பதிவு செய்யவும், அதன் மூலம் தகுதியானவர்களை தேர்வு செய்யவும் அரசு திட்டமிட்டுள்ளது. அதற்கான விண்ணப்பங்களையும், விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்வதற்கான முகாம் நடைபெறும் இடம், நாள் உள்ளிட்ட தகவல் அடங்கிய டோக்கனையும் ரேஷன் கடை ஊழியர்கள் விநியோகித்து வருகின்றனர்.

அதன்படி, விண்ணப்பங்களை பதிவு செய்யவும், பின்னர் அதனை பதிவேற்றம் செய்வதற்கும் தமிழ்நாடு முழுவதும் 35 ஆயிரத்து 923 முகாம்கள் அரசு சார்பில் நடத்தப்பட உள்ளன. இந்நிலையில் தர்மபுரி மாவட்டம், தொப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டிருக்கும் முகாமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். முகாமை தொடங்கி வைத்து பயனாளியிடம் முதலமைச்சர் கலந்துரையாடினார். மகளிர் உரிமைத்தொகை திட்டம் குறித்தும் பெண்களிடம் கேட்டறிந்தார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்