தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Temple Festival : திருவாரூரில் ஆகம விதிகளை மீறி உற்சவருக்கு அலங்காரம்

Temple Festival : திருவாரூரில் ஆகம விதிகளை மீறி உற்சவருக்கு அலங்காரம்

Priyadarshini R HT Tamil
Mar 24, 2023 07:02 PM IST

சைவ சமய தலைமை கோயிலான திருவாரூரில், கடந்த 9ம் தேதி கொடியேறி, பங்குனிப் பெருந் திருவிழா நடந்து வருகிறது.அதன் ஒரு பகுதியாக 23ம் தேதி வீதியுலாவிற்கு எழுந்தருளிய சந்திரசேகரர் மற்றும் அம்மைக்கு, திருமால் மற்றும் லட்சுமி அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

சந்திரசேகரர் மற்றும் அம்மைக்கு, திருமால் மற்றும் லட்சுமி அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
சந்திரசேகரர் மற்றும் அம்மைக்கு, திருமால் மற்றும் லட்சுமி அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

ட்ரெண்டிங் செய்திகள்

அலங்காரம் செய்த சம்பந்தப்பட்ட அர்ச்சகர், கோயிலில் பணி செய்யும் ஆதிசைவப் பெருமக்கள், நயினார் பெருமக்கள், கோயில் நிர்வாகிகளான இணை ஆணையர், உதவி ஆணையர், செயல் அலுவலர், தக்கார், அறங்காவலர், திருவாரூரில் இயங்கி வரும் சைவ அமைப்புகள்

என யாருக்குமே, இந்த அலங்காரம் மாபெரும் குற்றம் என்பது தெரியவில்லை.

விசாரித்த அளவில், 'இந்த அலங்காரம் செய்தால் என்ன தவறு? எல்லாம் ஒன்னுதானே!' என்று சம்பந்தப்பட்ட அர்ச்சகர் பதில் கேள்வி எழுப்பியுள்ளார். அந்த அளவிற்குத் தான் அவரது சமய அறிவு உள்ளது என்பது, சைவ உலகம் வேதனைப்பட வேண்டிய விஷயம். 

சிவாலயங்களில் உள்ள மூலவர், உற்சவ மூர்த்திகளுக்கு அலங்காரம் எப்படி செய்ய வேண்டும் என ஆகம விதிகள் உள்ளன. அவற்றைப் பற்றி மேற்கண்டோருக்கு ஆனா, ஆவன்னா கூடத் தெரியாமல் போனதுதான் இந்த அவலத்திற்கு அடிப்படைக் காரணம்.

இந்த விவகாரத்தில் இந்து சமய அறநிலையத் துறை உயரதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். சம்பந்தப்பட்ட அர்ச்சகரை அழைத்துக் கண்டிக்க வேண்டும். உரிய தண்டனையும் வழங்க வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற அவலங்கள் சிவாலயங்களில் அரங்கேறாது. 

இதேபோல் இன்னொரு சிவாலயத்தில், தலபுராணத்தின் பெயரில் கருவறையில் உள்ள அம்மைக்கு, இதேபோல் திருமண் சாத்தி திருப்பதி வேங்கடாசலபதி அலங்காரம் செய்கின்றார் ஓர் ஆதிசைவ அர்ச்சகர். 

அவரைப் போல் இன்னும் பலப்பலர், அலங்காரம் என்ற பெயரில் சிவாலயங்களில் ஆகம விதிமீறல்களில் அப்பட்டமாக, தைரியமாக ஈடுபடுகின்றனர். கேட்டால் பழக்க வழக்கம் என்கின்றனர். ஆகமங்களை விட பழக்க வழக்கங்களுக்கு அதிக பிராமாண்யம் கிடையாது என்பதை அவர்கள் அறிந்திருந்தாலும் வேறு சில சுக செளகரியங்களுக்காக இதுபோன்ற அத்துமீறல்களில் ஈடுபடுகின்றனர். 

இதுபோன்ற விவகாரங்களில், உள்ளூரில் அடியார் அமைப்புகள் பலமாக இருந்தால், மிக விரைந்து தீர்வு காண முடியும். இந்து சமய அறநிலையத் துறையின் இன்றைய கட்டமைப்பும் நிர்வாக அமைப்பும் நமக்கு நம்பிக்கை அளிப்பனவாக இல்லை. 

சிவாலயங்கள், வழிபாட்டிற்காக அனைவருக்கும் பொதுவானவையே. ஆனால் சிவாலயங்களில் நடக்கும் அன்றாட பூஜைகள், திருவிழாக்கள் ஆகமப்படி நடைபெற வேண்டும். அதை சித்தாந்த சைவர்களே முடிவு செய்ய வேண்டும். அப்போதுதான் சிவாலயங்களின் கட்டமைப்பு காப்பாற்றப்படும்.  

இனியாவது சைவ அடியார் அமைப்புகள் ஒன்றிணைந்து ஒருங்கிணைந்து செயல்பட முன்வர வேண்டும். இனியாவது ஆதிசைவர்களின் அமைப்புகள், அடிக்கடி நடத்தும் மாநாடுகளில் குண்ட மண்டலம் பற்றி மட்டுமே விவாதிக்காமல் இதுபோன்ற அவலங்களைப் பற்றியும் விவாதித்து தங்கள் சமூகத்தினருக்கு ஆகம விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். 

அர்ச்சக குடிகளின் நலன் பற்றி சமூக வலைதளங்களில் பேசி எழுதி வரும் அர்ச்சகர்கள், தங்கள் சமூகத்தினருக்கு இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படும்படியாகவும் எழுதிப்பரப்ப வேண்டும்.

முகநூல் பதிவு – நெல்லை சொக்கர்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்