தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Tancet Exam : டான்செட் சி.இ.இ.டி.ஏ நுழைவுத்தேர்வு எப்போது?

Tancet Exam : டான்செட் சி.இ.இ.டி.ஏ நுழைவுத்தேர்வு எப்போது?

Priyadarshini R HT Tamil
Jan 29, 2023 12:49 PM IST

முதுநிலை படிப்புகளில் சேர்வதற்கான டான்செட் மற்றும் சி.இ.இ.டி.ஏ நுழைவு தேர்வு மார்ச் 25, 26-ம் தேதிகளில் நடைபெற உள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

கோப்புப்படம்.
கோப்புப்படம்.

ட்ரெண்டிங் செய்திகள்

இதில், தேர்ச்சி பெறும் மாணவ மாணவிகள் மேல்படிப்புகளில் சேரலாம். இந்த நிலையில் எம்.பி.ஏ., எம். சி.ஏ. போன்ற படிப்புகளுக்கான டான்செட் தேர்வு வரும் மார்ச் 25ம் தேதி நடைபெற உள்ளது. ஆனால் முதுநிலை இன்ஜினியரிங் படிப்புகளுக்கு நடத்தப்படும்'டான்செட்' தேர்வுக்கு பதிலாக புதிய பெயரிலான நுழைவு தேர்வு நடக்க உள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. 

அதன்படி, டான்செட் என்ற பெயருக்கு பதிலாக, இனிமேல் சி.இ.இ.டி.ஏ., என்ற பெயரில் நுழைவுத்தேர்வு நடத்தப்படும். இதற்கான நுழைவுத தேர்வு வரும் மார்ச் மாதம் 26ம் தேதி நடத்தப்படும். 

இந்த படிப்புகளில் சேர விரும்பும் மாணவ, மாணவிகள் நுழைவுத் தேர்வை எழுத  http://tancet.annauniv.edu/tancet என்ற இணையதளத்தில் சென்று ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும். பிப்ரவரி 1ம் தேதி முதல் 20ம் தேதி வரை பதிவு செய்யலாம். இத்தேர்வு, தமிழ்நாட்டில் 14 நகரங்களில் எம்.பி.ஏ., எம்.சி.ஏ. போன்ற படிப்புகளுக்கான டான்செட் தேர்வு வருகிற மார்ச் மாதம் 25ம் தேதி நடக்க உள்ளது. இதுதொடர்பான மேலும் விவரங்களுக்கு tanceeta@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்புகொண்டு தெளிவு பெறலாம்.

அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைந்த மத்திய அரசின் நிதியுதவி பெறும், அரசு உதவிபெறும் இன்ஜினியரிங் கல்லூரிகள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களும் இந்த சேர்க்கை முறையை மேற்கொள்ளலாம். சுயநிதி இன்ஜினியரிங் கல்லூரி சேர்க்கை செயல்முறைக்கும் இந்த நுழைவுத்தேர்வு மதிப்பெண்ணையும் பயன்படுத்தலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்