தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Floating Restaurant: தமிழகத்தில் முதல் முறையாக..விரைவில் மிதக்கும் உணவக கப்பல்.. எங்கு தெரியுமா?

Floating Restaurant: தமிழகத்தில் முதல் முறையாக..விரைவில் மிதக்கும் உணவக கப்பல்.. எங்கு தெரியுமா?

Karthikeyan S HT Tamil
Apr 28, 2023 11:29 AM IST

Floating Restaurant: தமிழகத்தில் முதல்முறையாக அமைக்கப்பட்டு வரும் மிதக்கும் உணவகத்தின் தரைத்தளம் முழுவதும் குளிரூட்டப்பட்ட வசதியுடன் அமைக்கப்பட உள்ளது.

முட்டுக்காடு படகு இல்லம்
முட்டுக்காடு படகு இல்லம்

ட்ரெண்டிங் செய்திகள்

தற்போது, ​​அதிக சுற்றுலா பயணிகளை கவர்ந்திழுக்கும் வகையில், இங்கு ரூ.5 கோடி மதிப்பீட்டில் மிதக்கும் உணவக கப்பல் (Floating Restaurant Ship) அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. 125 அடி நீளம் மற்றும் 25 அடி அகலத்தில், பிரமாண்டமான இரண்டு அடுக்கு மிதக்கும் உணவக கப்பல் கட்டுமான பணிகள் துவங்கப்பட்டு தொடர்ந்து நடந்து வருகிறது.

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மற்றும் கொச்சியைச் சேர்ந்த கிராண்ட்யூனர் மரைன் இன்டர்நேஷனல் மூலம் தனியார் மற்றும் பொதுமக்கள் பங்களிப்புடன் மிதக்கும் உணவகத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்திற்கான மொத்த செலவு ரூ.5 கோடியாகும். 

தமிழகத்தில் முதல் முறையாக அமையப்போகும் மிதக்கும் உணவகம் (Floating Restaurant) இதுதான். இந்த மிதக்கும் உணவகத்தின் தளம் முழுவதும் குளிரூட்டப்பட்ட வசதி இருக்கும். முதல் தளம் திறந்த வெளி தளமாக வடிவமைக்கப்பட்டுள்ளது மற்றும் சுற்றுலா பயணிகள் மேல் தளத்தில் அமர்ந்து உணவு உண்டு பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கப்பலில் சமையலறை, சேமிப்பு அறை, கழிவறை மற்றும் இயந்திர அறை ஆகியவையும் இடம்பெறும். இந்த கப்பலில் 60 குதிரை திறன் கொண்ட இன்ஜின் பொருத்தப்பட உள்ளது.

இந்த பணிகளை, சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது, பணிகள் குறித்து அமைச்சர் பணியாளர்களிடம் கேட்டறிந்தார். அப்போது ஒரு மாதத்தில் பணிகள் முடிவடையும் என பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். பணிகள் முழுமையாக முடிந்த பிறகு சுற்றுலா பயணிகளுக்காக இந்த மிதக்கும் உணவகம் விரைவில் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்