தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Sterilite: ஸ்டெர்லைட் ஆலையை அனுமதிக்க முடியாது-தமிழக அரசு

Sterilite: ஸ்டெர்லைட் ஆலையை அனுமதிக்க முடியாது-தமிழக அரசு

Pandeeswari Gurusamy HT Tamil
Aug 21, 2023 11:49 AM IST

ஸ்டெர்லைட் ஆலையை தமிழகத்தில் அனுமதிக்க முடியாது என உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை

ட்ரெண்டிங் செய்திகள்

தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் ஆலைக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து டெல்லி உச்சநீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் மேல் முறையீட்டு வழக்கை தாக்கல் செய்திருந்தது இந்நிலையில் தமிழக அரசு தரப்பில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் 25 பக்கங்கள் கொண்ட தனது அறிக்கையை சமர்ப்பித்துள்ளது அதில் வேதாந்தா நிறுவனம் கடந்த 22 ஆண்டுகளுக்கும் மேலாக சுற்றுச்சூழல் மாசை உருவாக்கியுள்ளது. அடிப்படையான விதிகளை கூட குறைந்த பட்சம் வேதாந்த நிறுவனம் பின்பற்றியது இல்லை. இது சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான விவகாரம் என்பதால் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் செயல்பட அனுமதிக்க முடியாது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் வேதாந்தா நிறுவனம் தொடங்க மேல்முறையீட்டு மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்து உத்தரவிட வேண்டும் என தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் கோரிக்கை விடுத்துள்ளது

முன்னதாக தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடி தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது இந்த வழக்கை உயர் நீதிமன்றம் ரத்து செய்ததை தொடர்ந்து ஆலை நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் ஆலையை தற்காலிகமாக திறக்கவும் அல்லது பராமரிக்கவோ அனுமதிக்க முடியாது என மறுத்தது. ஆனால் கொரோனா காலகட்டத்தில் ஆக்சிஜன் உற்பத்தியை மேற்கொள்வதற்காக தற்காலிக அனுமதி வழங்கியது. அதன் பிறகு ஆலை மீண்டும் மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்