Election Vote Share: சரியும் திமுக! கெத்தாகும் அதிமுக! புருவம் உயரவைக்கும் பாஜக! 2019 - 2024 வாக்கு சதவீதம் ஒரு ஒப்பீடு!
Tamil Nadu Elections 2019 vs 2024: தேர்தல் ஆணையம் வெளியிட்ட தகவலின் அடிப்படையில் பார்க்கும் போது, 2019ல் திமுக பெற்ற வாக்கு சதவீதம் 32.76 சதவீம் ஆக இருந்தது. 2024ல் பெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அதன் வாக்கு சதவீதம் 26.93 ஆக உள்ளது. இது கடந்த தேர்தலை விட 5.83 சதவீதம் குறைவாகும்.
கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் மொத்தமுள்ள 39 தொகுதிகளில் 38 தொகுதிகளை கைப்பற்றியது திமுக தலைமையிலான கூட்டணி. முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் மற்றும் தேனி தொகுதியில் வெற்றி பெற, அதிமுகவுக்கு அது ஒன்று மட்டுமே ஆறுதலாகவும் இருந்தது.
40 தொகுதிகளையும் கைப்பற்றிய திமுக
இந்நிலையில், முதல்வராக, திமுக தலைவராக ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணி 2024 மக்களவைத் தேர்தலை சந்தித்தது. இந்த முறை போட்டி கடினமாக இருக்கும் என்று கணிக்கப்பட்ட நிலையில், தமிழகம் முழுவதும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளே வெற்றி பெற்றன.
குறையும் திமுகவின் வாக்கு சதவீதம்
கடந்த முறை ஒரு தொகுதியில் தோற்றாலும், திமுக பெற்ற வாக்கு விகிதம் பெரிய அளவில் இருந்தது. அதே நேரத்தில், அனைத்து தொகுதியில் வெற்றி பெற்றும் திமுக கூட்டணியின் வாக்கு சதவீதம் கணிசமாக குறைந்திருக்கிறது. அதே நேரத்தில் அதிமுக வாக்கு சதவீதமும் கடந்த நாடாளுமன்றத் தேர்தலை ஒப்பிடும் போது உயர்ந்து உள்ளது.
குறையும் திமுகவின் வாக்கு சதவீதம்
இதில் குறிப்பிட வேண்டிய விஷயம், பாஜகவின் ஓட்டு சதவீதம் உயர்ந்திருக்கிறது. அது திமுக ஓட்டு சதவீதத்தை கடுமையாக பாதித்திருக்கிறது. தேர்தல் ஆணையம் வெளியிட்ட தகவலின் அடிப்படையில் பார்க்கும் போது, 2019ல் திமுக பெற்ற வாக்கு சதவீதம் 32.76 சதவீம் ஆக இருந்தது. 2024ல் பெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அதன் வாக்கு சதவீதம் 26.93 ஆக உள்ளது. இது கடந்த தேர்தலை விட 5.83 சதவீதம் குறைவாகும்.
2019ஐ விட அதிக ஓட்டுக்கள் வாங்கிய அதிமுக
அதே நேரத்தில் அதிமுக, 2019 நாடாளுமன்றத் தேர்தலில் தேர்தலில் 18.48 சதவீதம் வாக்குகளை பெற்றிருந்தது. இந்த முறை 20.46 சதவீதம் வாக்குகளை பெற்றிருக்கிறது. இது கடந்த தேர்தலோடு ஒப்பிடும் போது, 2.06 சதவீதம் அதிகமாகும். இதில் மற்றொரு குறிப்பிடும் சாரம்சமும் உள்ளது.
கூட்டணி இல்லாமல் அதிமுகவின் வாக்கு சதவீதம் அதிகரிப்பு
கடந்த தேர்தலில் திமுக, தற்போதுள்ள இதே கூட்டணியுடன் தான் தேர்தலை சந்தித்தது. ஆனால், அதிமுக இந்த முறை பாஜக, பாமக, தமாக உள்ளிட்ட பல கூட்டணி கட்சிகள் இல்லாமல் போட்டியிட்டது. அப்போது அதிமுக உடன் ஓபிஎஸ் இருந்தார். இந்த முறை அவரது அணி என்கிற ஒரு தரப்பு பிரிவையும் அதிமுக சந்தித்தது. அத்தனையும் கடந்து அதிமுக இந்த முறை பெற்றிருக்கும் வாக்குகள், அபாரமானது தான் என்றாலும், வெற்றி இல்லை எனும் போது, அதை கொண்டாடவோ, தூக்கிப் பிடிக்கவோ இயலாத நிலையில் அதிமுக உள்ளது.
உயர்ந்த பாஜகவின் வாக்கு சதவீதம்
அடுத்த இடத்தில் பாஜக, கடந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்டு 3.66 சதவீதத்தை பெற்றத பாஜக. இந்த முறை அதிமுக கூட்டணி இல்லாமல் 11.24 சதவீதம் வாக்குகளை பெற்றுள்ளது பாஜக. இது கடந்த தேர்தலுடன் ஒப்பிடும் போது, 7.58 சதவீதம் வாக்குகள் அதிகமாகும். உண்மையில் பாஜகவின் இந்த வளர்ச்சி, கவனிக்க வேண்டிய ஒன்று தான். குறிப்பாக, திமுகவின் எதிர்ப்பு வாக்குகளை அதிமுகவை விட, பாஜக தான் அதிகம் அறுவடை செய்திருக்கிறது.
தனித்து நின்று தனித்து தெரியும் நாம் தமிழர்
நாம் தமிழர் கட்சியும் இந்த முறை சிறப்பான பங்களிப்பை அளித்திருக்கிறது. தமிழ்நாடு புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்ட நாம் தமிழர் கட்சிக்கு 8.22%, வாக்குகள் கிடைத்து உள்ளது.
டாபிக்ஸ்