Election Results 2024 Live Updates : நெல்லையில் அதிமுகவை பின்னுக்குத் தள்ளிய நாம் தமிழர் கட்சி!
ElectionResults 2024 Live Updates : தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, கோயம்புத்தூர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தருமபுரி, சிதம்பரம், விழுப்புரம், கரூர், மயிலாடுதுறை, ராமநாதபும், தேனி உள்ளிட்ட முக்கிய தொகுதிகள் மட்டுமின்றி, நாட்டின் முழு முடிவுகளும் தெரிந்து கொள்ளலாம்.
Fri, 21 Jun 202401:24 PM IST
Reddit: சட்டமன்றத்தில் நடந்தது என்ன?
Tue, 04 Jun 202411:48 AM IST
Lok Sabha Election Results 2024 Live : சுயேட்சை வேட்பாளர் OPS தோல்வி
Lok Sabha Election Results 2024 Live : முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தோல்வி அடைந்துள்ளார்.
Tue, 04 Jun 202411:44 AM IST
Election Results 2024 Live Updates : விளவங்கோடு சட்டப்போரவை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் முன்னிலை
Election Results 2024 Live Updates : விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் தாரகை கத்பெர்ட் 60% வாக்குகளுடன் முன்னிலையில் உள்ளார். நாம் தமிழர் வேட்பாளர் 3 ஆவது இடத்தில் உள்ள நிலையில் அதிமுக 4 ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
Tue, 04 Jun 202411:33 AM IST
Lok Sabha Election Results 2024 Live : மீண்டும் 9வது முறையாக தோல்வியை சந்தித்த கிருஷ்ணசாமி!
Lok Sabha Election Results 2024 Live : மக்களவை தேர்தலில் போட்டியிட்ட 9 முறையும் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தோல்வியை மட்டுமே சந்தித்துள்ளார்.
Tue, 04 Jun 202411:30 AM IST
Lok Sabha Election Results 2024 Live : 7 ஆவது இடத்தில் மன்சூர் அலிகான்
Lok Sabha Election Results 2024 Live : 1663 வாக்குகள் மட்டும் பெற்று மன்சூர் அலிகான் 7 ஆவது இடத்தில் உள்ளார்.
Tue, 04 Jun 202410:31 AM IST
Lok Sabha Election Results 2024 Live : சு.வெங்கடேசன் வெற்றி!
Lok Sabha Election Results 2024 Live : நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் முன்னிலை அடிப்படையில் சு.வெங்கடேசன் எம்பி வெற்றி என தகவல் வெளியாகி உள்ளது.
Tue, 04 Jun 202410:20 AM IST
Lok Sabha Election Results 2024 Live : காய் நகர்த்தும் சரத்பவார்
Lok Sabha Election Results 2024 Live : நவீன் காய் நகர்த்தும் சரத்பவார் சந்திரபாபு நாயுடு நவீன் பட்நாயக்குடன் பேச்சு வார்த்தை நடத்துகிறார்
Tue, 04 Jun 202410:00 AM IST
Lok Sabha Election Results 2024 Live : ஆம் ஆத்மி வாஷ் அவுட்!
Lok Sabha Election Results 2024 Live : டில்லியில் 7 தொகுதிகளிலும் ஆம்ஆத்மி பின்னடைவு
Tue, 04 Jun 202409:57 AM IST
Lok Sabha Election Results 2024 Live : இன்று மாலை டில்லியில் பேச்சு வார்த்தை
Lok Sabha Election Results 2024 Live : இன்று மாலை டில்லியில் பேச்சு வார்த்தை
Tue, 04 Jun 202409:31 AM IST
Lok Sabha Election Results 2024 Live : மக்களவைத் தேர்தல் முடிவுகள்.. தமிழ்நாடு நிலவரம் இதோ
Lok Sabha Election Results 2024 Live : மக்களவைத் தேர்தல் முடிவுகள்.. தமிழ்நாடு நிலவரம் இதோ
Tue, 04 Jun 202409:29 AM IST
Lok Sabha Election Results 2024 Live : OPS களின் வாக்கு நிலவரம்
Lok Sabha Election Results 2024 Live : OPS களின் வாக்கு நிலவரம் இதோ
Tue, 04 Jun 202409:35 AM IST
Lok Sabha Election Results 2024 Live : கோவையில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் முன்னிலை!
Lok Sabha Election Results 2024 Live : கோவையில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் 39,013 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். பாஜக தலைவர் அண்ணாமலை இரண்டாவது இடத்திற் உள்ளார்.
Tue, 04 Jun 202408:56 AM IST
Election Results 2024 Live Updates : ஆந்திர முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு9ம் தேதி பதவியேற்பு
Election Results 2024 Live Updates : ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி வெற்றி பெற்றுள்ள நிலையில் முதலமைச்சராக வரும் 9ம் தேதி சந்திரபாபு நாயுடு பதவியேற்கிறார்.
Tue, 04 Jun 202408:34 AM IST
Lok Sabha Election Results 2024 Live : திருவனந்தபுரத்தில் சசி தரூர் முன்னிலை
Lok Sabha Election Results 2024 Live : திருவனந்தபுரம் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் சசி தரூர் 429 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
Tue, 04 Jun 202408:19 AM IST
Election Results 2024 Live Updates : ஒடிசா சட்டப்பேரவை தேர்தல் - தொங்கு சட்டப்பேரவையா?
Election Results 2024 Live Updates : ஒடிசாவில் பெரும்பான்மைக்கு 74 இடங்கள் தேவை என்ற நிலையில் 72 இடங்களில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது. இதனால் அங்கு தொங்கு சட்ட சபை அமையுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
Tue, 04 Jun 202408:15 AM IST
Lok Sabha Election Results 2024 Live : காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் முன்னிலை!
Lok Sabha Election Results 2024 Live : திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதியின் 10வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் 2,03,708 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார்.
Tue, 04 Jun 202407:57 AM IST
சுரேஷ் கோபி அபார வெற்றி.. கேரளாவில் கால் பதித்த பாஜக!
கேரளாவில் திருச்சூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் சுரேஷ் கோபி வெற்றி பெற்றுள்ளார். கேரளாவில் மக்களவை தொகுதியில் முதல் முறையாக பாஜக கால்பதித்துள்ளது.
Tue, 04 Jun 202407:26 AM IST
Lok Sabha Election Results 2024 Live : மதுரையில் சு.வெங்கடேசன் முன்னிலை!
Lok Sabha Election Results 2024 Live : மதுரை நாடாளுமன்ற தொகுதியில் 2,07, 102 வாக்குகள் பெற்று சிபிஎம் வேட்பாளர் சு.வெங்கடேசன் முன்னிலையில் உள்ளார்.
Tue, 04 Jun 202407:08 AM IST
Lok Sabha Election Results 2024 Live :பாமகவை நாம் தமிழர் கட்சி வேட்பாளர்
Lok Sabha Election Results 2024 Live : கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதியில் 10 ஆவது சுற்று முடிவில், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் ஜெகதீசனை, பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் போட்டியிட்ட தேவதாஸ் ராமசாமி 383 வாக்குகள் குறைவாக பெற்று நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்
Tue, 04 Jun 202406:45 AM IST
Lok Sabha Election Results 2024 Live : ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதி யில் டி.ஆர் பாலு முன்னிலை
Lok Sabha Election Results 2024 Live : ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதியில் 83,178 வாக்குகள் வித்தியாசத்தில் டி.ஆர்.பாலு முன்னிலை வகித்து வருகிறார்
Tue, 04 Jun 202406:26 AM IST
Lok Sabha Election Results 2024 Live : தூத்துக்குடியில் கனிமொழி முன்னிலை
Lok Sabha Election Results 2024 Live : தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் 1,11,434 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் கனிமொழி முன்னிலையில் உள்ளார்.
Tue, 04 Jun 202406:16 AM IST
Lok Sabha Election Results 2024 Live : திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமி முன்னிலை!
Lok Sabha Election Results 2024 Live : பொள்ளாட்சி தொகுதியில் திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமி 16,854 வாக்குகள் முன்னிலையில் உள்ள நிலையில் திமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்து உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Tue, 04 Jun 202405:58 AM IST
Election Results 2024 Live Updates : சசிகாந்த் செந்தில் முன்னிலை!
Election Results 2024 Live Updates : திருவள்ளூர் மக்களவை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் 63,261 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வருகிறார்.
Tue, 04 Jun 202405:33 AM IST
ஆட்சியை இழக்கும் ஜெகன் மோகன் ரெட்டி
Andra Pradesh Election Results 2024: ஆந்திர சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை விட அதிகமான இடங்களில் தெலுங்கு தேசம் (110) இடங்களில் முன்னிலை வகிக்கிறது. ஆளும் YSRCP 22 தொகுதிகளில் மட்டுமே முன்னிலையில் உள்ளது.
Tue, 04 Jun 202405:27 AM IST
சேலம் இரண்டாம் சுற்று நிலவரம்
Salem: சேலம் நாடாளுமன்ற தொகுதி இரண்டாம் சுற்று நிலவரப்படி, மொத்தம் 9245 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் செல்வகணபதி முன்னிலை பெற்றுள்ளார்.
திமுக வேட்பாளர் செல்வகணபதி 26,871 வாக்குகள்.
அதிமுக வேட்பாளர் விக்னேஷ் 22928 வாக்குகள்.
பாமக வேட்பாளர் அண்ணாதுரை 6,352 வாக்குகள்.
இரண்டாம் சுற்றில் முடிவில் 3843 வாக்குகள் வித்தியாசம்
Tue, 04 Jun 202405:24 AM IST
மதுரை : 2ஆம் சுற்று முடிவு
Madurai: சிபிஎம் சு.வெங்கடேசன் 2ஆம்சுற்று முடிவில் 18,249 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார்.
மதுரை : 2ஆம் சுற்று முடிவு
சு. வெங்கடேசன் (சிபிஎம்)- 47,673
டாக்டர் சரவணன் (அதிமுக) - 29,534
பேராசிரியர் ஸ்ரீனிவாசன் (பாஜக)- 17,909
சத்யா தேவி (நாம் தமிழர்)- 12,065
Tue, 04 Jun 202405:16 AM IST
நாம் தமிழர் கட்சி 3வது இடம்
Nellai: நெல்லையில் அதிமுகவை பின்னுக்குத் தள்ளி நாம் தமிழர் வேட்பாளர் 3-வது இடம் பிடித்துள்ளார்.
நெல்லை தொகுதி தற்போதைய நிலவரம்
காங்கிரஸ் - 20,786
பாஜக - 16,578
நாம் தமிழர் - 4032
அதிமுக - 3765
Tue, 04 Jun 202405:20 AM IST
சௌமியா அன்புமணி முன்னிலை
Dharmapuri: பாஜக கூட்டணியில் தர்மபுரி தொகுதியில் பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி 49,644 வாக்குகள் பெற்று முன்னிலை பெற்றுள்ளார். திமுக வேட்பாளர் மணி 35,596 வாக்குகள் பெற்று பின்தங்கி உள்ளார். அதிமுக வேட்பாளர் அசோகன் 31,733 வாக்குகள் பெற்றுள்ளார்.
Tue, 04 Jun 202405:09 AM IST
திருச்சி இரண்டாம் சுற்று நிலவரம்
Trichy: திருச்சி தொகுதியில் 24,407 வாக்குகள் வித்தியாசத்தில் துரை வைகோ முன்னிலை பெற்றுள்ளார்.
திருச்சி நாடாளுமன்ற தொகுதி
அதிமுக (கருப்பையா) - 23,068
அமமுக (செந்தில்நாதன்) - 7837
நாம் தமிழர் கட்சி (ராஜேஷ்) - 10761
துரை வைகோ (சுயேட்சை) - 47,475
Tue, 04 Jun 202405:01 AM IST
நெல்லையில் காங்கிரஸ் முன்னிலை
Nellai: திருநெல்வேலியில் முதல் சுற்று முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் ப்ரூஸ் முன்னிலை பெற்றுள்ளார். அதிமுகவை பின்னுக்குத் தள்ளி நாம் தமிழர் கட்சி 3வது இடம் பிடித்துள்ளது.
காங்கிரஸ் - 20 ,661
பாஜக - 16,213
நாம் தமிழர் - 3,894
அதிமுக - 3,675
Tue, 04 Jun 202404:59 AM IST
இரண்டு தொகுதிகளில் அதிமுக கூட்டணி முன்னிலை
AIADMK Alliance: விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில் தேமுதிகவின் விஜய பிரபாகரனும், தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் புதிய தமிழகம் கிருஷ்ணசாமியும் முன்னிலை பெற்றுள்ளனர்.
Tue, 04 Jun 202404:51 AM IST
துரை வைகோ முன்னிலை
திருச்சி நாடாளுமன்ற தொகுதி முன்னிலை நிலவரம்
அதிமுக (கருப்பையா) - 12,981
அமமுக (செந்தில்நாதன்) - 4047
நாம் தமிழர் கட்சி (ராஜேஷ்) - 5847
துரை வைகோ (சுயேட்சை) - 26,186
முதல் சுற்று எண்ணிக்கைக்கு நிலவரப்படி முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.
Tue, 04 Jun 202404:43 AM IST
பிரதமர் மோடி முன்னிலை
PM Modi: உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் போட்டியிட்ட பிரதமர் மோடி 4வது சுற்று முடிவில் முன்னிலை பெற்றுள்ளார். நரேந்திர மோடி அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் அஜய்ராய்யை விட 400 வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.
Tue, 04 Jun 202404:39 AM IST
மக்களவைத் தேர்தல் முடிவுகள் - காலை 10.00 மணி முன்னணி நிலவரம்
முன்னிலை (இந்தியா)
காங் - 226
பாஜக - 285
முன்னிலை (தமிழ்நாடு)
திமுக - 36
அதிமுக - 3
பாஜக - 1
Tue, 04 Jun 202404:38 AM IST
விளவங்கோடு தொகுதி நிலவரம்
Vilavancode: விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் முதல் சுற்றில் 2660 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.
Tue, 04 Jun 202404:37 AM IST
நடிகர் சுரேஷ் கோபி முன்னிலை!
Suresh Gopi: காலை 9.45 மணி நிலவரப்படி கேரளத்தின் திரிச்சூர் தொகுதியில் பாஜக வேட்பாளரான நடிகர் சுரேஷ் கோபி 8,980 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார். அதே தொகுதியின் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் சுனில் குமார் 47,666 வாக்குகள் பெற்றுள்ள நிலையில் பாஜக வேட்பாளரான சுரேஷ் கோபி 56,646 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.
Tue, 04 Jun 202404:14 AM IST
தேனியில் டி.டி.வி.தினகரன் பின்னடைவு
Theni: தேனி முன்னிலை நிலவரம்
திமுக : 23,820
அதிமுக : 13,576
அமமுக : 13,525
நாம் தமிழர் : 3383.
திமுக வேட்பாளர் தங்கத்தமிழ் செல்வன் 10244 வாக்குகள் முன்னிலை.
Tue, 04 Jun 202404:09 AM IST
வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி பின்னடைவு
PM Modi: வாரணாசி மக்களவைத் தொகுதியில் பிரதமர் மோடி பின்னடைவை சந்தித்துள்ளார். அவர் 6000 வாக்குகள் வித்தியாசத்தில் பின்தங்கியுள்ளார்.
Tue, 04 Jun 202403:57 AM IST
காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் முன்னிலை
Congress: கடலூர் நாடாளுமன்ற தேர்தல் முதல் சுற்றில் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணுபிரசாத் 5575 வாக்குக்கள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
காங்கிரஸ் -25228
தேமுதிக - 19653
பாமக - 11195
நாதக - 3151
Tue, 04 Jun 202403:40 AM IST
அண்ணாமலை பின்னடைவு
Annamalai: கோயம்புத்தூர் தொகுதியில் பாஜக வேட்பாளர் அண்ணாமலை 3275 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவு
Tue, 04 Jun 202403:35 AM IST
பிரஜ்வல் ரேவண்ணா முன்னிலை
பாலியல் வழக்கில் சிக்கி வெளிநாட்டில் தலைமறைவாக இருந்து தற்போது கைதான கா்நாடக மஜத எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணா முன்னிலையில் உள்ளார்.
Tue, 04 Jun 202403:35 AM IST
திருச்சியில் மதிமுக முன்னிலை
Trichy: திருச்சியில் மதிமுக வேட்பாளர் துரை வைகோ முன்னிலையில் உள்ளார். இரண்டாவது இடத்தில் நாம் தமிழர் வேட்பாளர் உள்ளார்.
Tue, 04 Jun 202403:26 AM IST
கார்த்தி சிதம்பரம் முன்னிலை
Sivaganga: சிவகங்கை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் 3000 வாக்குகள் பெற்று முன்னிலை
Tue, 04 Jun 202403:25 AM IST
நயினார் நாகேந்திரன் முன்னிலை
Nellai: நெல்லை நாடாளுமன்ற தொகுதியில் ராதாபுரம் சட்டமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கையில் முதல் சுற்றில் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் முன்னிலை
Tue, 04 Jun 202403:18 AM IST
கேரளா முன்னிலை நிலவரம்
Kerala: வயநாடு தொகுதில் காங்கிரஸ் வேட்பாளர் ராகுல் காந்தி முன்னிலை
திருவனந்தபுரம் தொகுதியில் சசி தரூர் முன்னிலை
Tue, 04 Jun 202403:16 AM IST
இந்திய அளவில் பாஜக முன்னிலை
முன்னிலை நிலவரம்
தேசிய ஜனநாயக கூட்டணி - 201
இந்தியா கூட்டணி - 114
இதர கட்சியினர் - 12
Tue, 04 Jun 202402:52 AM IST
தபால் வாக்குகளில் திமுக முன்னிலை
DMK: தமிழகம் முழுவதும் மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. முதல்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், திமுக பெரும்பாலான இடங்களில் முன்னிலை பெற்று வருகிறது. தென் சென்னை, மத்திய சென்னை, வட சென்னை, காஞ்சிபுரம், திருச்சி, மதுரை, தஞ்சை, பெரம்பலூர் உள்ளிட்ட பல இடங்களில் திமுக கூட்டணி முன்னிலையில் இருந்து வருகிறது.
Tue, 04 Jun 202402:31 AM IST
தொடங்கியது வாக்கு எண்ணிக்கை
ஸ்ராங்க் ரூம் திறக்கப்பட்டு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கட்சிகளின் முகவர்கள் முன்னிலையில், வாக்கு எண்ணும் அறைக்கு கொண்டு வரப்பட்டன. சரியாக 8 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணிக்கை தொடங்கியது
Tue, 04 Jun 202402:24 AM IST
இன்னும் சற்று நேரத்தில்..
இன்னும் சற்று நேரத்தில் வாக்குகள் எண்ணப்பட உள்ள நிலையில், ஸ்ராங்க் ரூம் திறக்கப்பட்டு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கட்சிகளின் முகவர்கள் முன்னிலையில், வாக்கு எண்ணும் அறைக்கு கொண்டு வரப்படுகின்றன.
Tue, 04 Jun 202402:06 AM IST
சில சட்டப்பேரவைகளுக்கும் இன்று முடிவுகள் அறிவிப்பு
ஆந்திரா மற்றும் ஒடிசா மாநில சட்டப்பேரவைகள் மற்றும் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஆகியவற்றின் வாக்குகளும் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.
Tue, 04 Jun 202402:00 AM IST
திருமாவளவனின் வருகை
சிதம்பரம்: வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வருகைதந்த விசிக வேட்பாளர் தொல் திருமாவளவன்
Tue, 04 Jun 202401:46 AM IST
விளவங்கோட்டில் தொடங்க இருக்கும் வாக்கு எண்ணிக்கை
விளவங்கோடு சட்டப்பேரவை இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் காலை 8 மணிக்கு எண்ணப்பட உள்ளன
காங்கிரஸ் சார்பில் தேர்வு செய்யப்பட்ட விஜயதரணி பாஜகவில் இணைந்து தனது பதவியை ராஜினாமா செய்த காரணத்தால் இடைத்தேர்தல் நடைபெற்றது
Tue, 04 Jun 202401:32 AM IST
சிதம்பரத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் பதிவான 9,993 தபால் வாக்குகள், துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன், அரியலூர் ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது.
Tue, 04 Jun 202401:19 AM IST
முகவர்களை அனுப்பும் பணி தீவிரம்
நாடு முழுவதும் 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கவுள்ள நிலையில், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் வாக்குச் சாவடி முகவர்களை மையத்திற்குள் அனுப்பும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
Tue, 04 Jun 202401:11 AM IST
இனிப்புகள் தயார்!
சத்தீஷ்கர் ராய்ப்பூரில் பாஜக வெற்றியைக் கொண்டாடுவதற்குத் தயாராக 201 கிலோ கிராம் லட்டு வாங்கி வைக்கப்பட்டிருக்கிறது. இன்று மக்களவைத் தேர்தலுக்குண்டான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் தெரியவரும்.
Tue, 04 Jun 202412:53 AM IST
வாக்குச் சாவடி முகவர்களுக்கு கடும் சோதனை
காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கவுள்ள நிலையில், வாக்குச்சாவடி முகவர்கள் கடும் சோதனைக்கு பின் வாக்கு எண்ணும் மையத்திற்குள் அனுப்பப்படுகின்றனர்.
முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு, அதன்பின் ஸ்ட்ராங் ரூம் திறக்கப்பட்டு வாக்குகள் எண்ணப்படும்.
Tue, 04 Jun 202412:40 AM IST
30 ஆயிரம் ஊழியர்கள் பங்கேற்பு
தமிழ்நாட்டில் 39 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் பணியில் 30 ஆயிரம் ஊழியர்கள் பங்கேற்பு. மாநிலம் முழுவதும் பாதுகாப்புப் பணிக்காக ஒரு லட்சம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
Mon, 03 Jun 202403:24 PM IST
வாக்கு நிலவரம் எவ்வாறு தெரியவரும்?
Election Results 2024 Live Updates : முதலில் தபால் ஓட்டுகள் தான் எண்ணப்படும். மாநிலம் முழுவதும் இதே நடைமுறையே பின்பற்றப்படும்
Mon, 03 Jun 202403:23 PM IST
முடிவு எப்போது தெரியும்?
Election Results 2024 Live Updates : தேர்தல் முன்னிலை நிலவரம் காலை 8 மணிக்கெல்லாம் தெரியவரும். பின்னர் பிற்பகலுக்குப் பின் ஓரளவிற்கு வெற்றியாளர் யார் என்பதை கணித்துவிடலாம்.
Mon, 03 Jun 202403:22 PM IST
இந்திய அரியணை ஏறப் போவது யார்?
Election Results 2024 Live Updates : இந்தியா முழுவதும் நடந்த ஓட்டுகள் இன்று எண்ணப்பட்டு, புதிய ஆட்சியை இந்தியாவில் அமைக்கப் போவது யார் என்பது இன்று தெரியவரும்.