தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Modi Vs Rahul Vote Percentage: மோடி, ராகுல் 2019, 2024 தேர்தலில் பெற்ற ஓட்டுகள் எவ்வளவு?-ஓர் ஒப்பீடு

Modi vs Rahul vote percentage: மோடி, ராகுல் 2019, 2024 தேர்தலில் பெற்ற ஓட்டுகள் எவ்வளவு?-ஓர் ஒப்பீடு

Manigandan K T HT Tamil
Jun 05, 2024 09:49 AM IST

Lok Sabha Election Results 2024: வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி 1,52,513 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸின் அஜய் ராயை தோற்கடித்தார். ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி 3,89,341 வாக்குகளும், வயநாடு தொகுதியில் 3,64,422 வாக்குகள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றுள்ளனர்.

Modi vs Rahul vote percentage: மோடி, ராகுல் 2019, 2024 தேர்தலில் பெற்ற ஓட்டுகள் எவ்வளவு?-ஓர் ஒப்பீடு
Modi vs Rahul vote percentage: மோடி, ராகுல் 2019, 2024 தேர்தலில் பெற்ற ஓட்டுகள் எவ்வளவு?-ஓர் ஒப்பீடு

ட்ரெண்டிங் செய்திகள்

543 உறுப்பினர்களைக் கொண்ட மக்களவையில் பாஜக மட்டும் 240 இடங்களை வெல்ல முடிந்தது. இது 2019 இல் பாஜக வென்ற 303 இடங்களை விட 63 இடங்கள் குறைவாகும். காங்கிரஸ் கட்சி 99 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது, இது 2019 பொதுத் தேர்தலில் பெற்ற எண்ணிக்கையை விட கிட்டத்தட்ட இரு மடங்கு என்று இந்திய தேர்தல் ஆணையம் (இசிஐ) தெரிவித்துள்ளது.

மோடியின் வித்தியாசம் குறைவு

தனிப்பட்ட செயல்திறனைப் பொறுத்தவரை, பிரதமர் மோடி மூன்றாவது முறையாக உத்தரபிரதேசத்தில் உள்ள வாரணாசி தொகுதியை தக்க வைத்துக் கொண்டார்.

பிரதமர் மோடி 1,52,513 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். மோடி 6,12,970 வாக்குகளும், காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராய் 4,60,457 வாக்குகளும் பெற்றார். பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் ஏதர் ஜமால் லாரி 33,766 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.

வாரணாசி தொகுதி ஓட்டு வித்தியாசம்
வாரணாசி தொகுதி ஓட்டு வித்தியாசம்

2014 மற்றும் 2019 தேர்தல்களுடன் ஒப்பிடும்போது 2024 இல் பிரதமர் மோடியின் வாக்கு வித்தியாசம் குறைந்தது.

2019 பொதுத் தேர்தலில் பிரதமர் மோடி தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட ஷாலினி யாதவை 6,74,664 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். அப்போது வாரணாசியில் பிரதமர் 63.62 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்தார். 

2014 தேர்தலில், பிரதமர் மோடி ஆம் ஆத்மி கட்சித் தலைவரும் தற்போதைய டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலை தோற்கடித்தபோது, வெற்றி வித்தியாசம் 4 லட்சத்திற்கும் அதிகமாக இருந்தது.

ராகுல்

காந்தி போட்டியிட்ட ரேபரேலி மற்றும் வயநாடு தொகுதிகளில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி அமோக வெற்றி பெற்றார்.

 

ராகுல் வெற்றி
ராகுல் வெற்றி

ராகுல் காந்தி 3,89,341 வாக்குகள் வித்தியாசத்தில் ரேபரேலி தொகுதியில் வெற்றி பெற்றார். 2019 மக்களவைத் தேர்தலில், ராகுலின் தாயார் சோனியா காந்தி குடும்ப கோட்டையான ரேபரேலியில் 1,67,178 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

வயநாடு தொகுதியிலும் ராகுல் காந்தி 3,64,422 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 2019 ஆம் ஆண்டில், ராகுல் வயநாடு தொகுதியில் இருந்து 4.3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

லோக்சபா தேர்தல் 2024

18வது லோக்சபா தேர்தல் நாடு முழுவதும் நடைபெற்றது. ஏப்ரல் 19 முதல் ஜூன் 1, 2024 வரை 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபற்றது. ஜூன் 4 அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் (ECI) மார்ச் 16 அன்று தேர்தல் அட்டவணையை அறிவித்தது. தேர்தல் நடத்தை விதிகள் (எம்சிசி) உடனடியாக அமலுக்கு வந்தது. 2019 லோக்சபா தேர்தல் 75 நாட்களில் முடிவடைந்த நிலையில், 2024 இல் சமீபத்திய தேர்தல் செயல்முறை 81 நாட்களுக்கு தொடர்ந்தது. நேற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

டி20 உலகக் கோப்பை 2024