தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Independence Day: ரூ.1 லட்சம் மானியம், காலை உணவுத்திட்டம் விரிவாக்கம்.. புதிய அறிவிப்புகளை அள்ளி தெளித்த முதல்வர்!

Independence Day: ரூ.1 லட்சம் மானியம், காலை உணவுத்திட்டம் விரிவாக்கம்.. புதிய அறிவிப்புகளை அள்ளி தெளித்த முதல்வர்!

Karthikeyan S HT Tamil
Aug 15, 2023 11:58 AM IST

பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சிறப்பு திட்டம் உள்பட பல்வேறு புதிய திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அறிவித்துள்ளார்.

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

ட்ரெண்டிங் செய்திகள்

இதனை தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், சென்னை போன்ற பெருநகரங்கள் முதல் பல்வேறு நகரங்களிலும் இன்று நாம் அடிக்கடி காணக்கூடிய காட்சி ஒன்று உள்ளது. ஓலா, உபேர், ஸ்விக்கி, சொமேட்டோ போன்ற நிறுவனங்களைச் சார்ந்த வாகனங்கள் விரைவாக சேவை வழங்கும் நோக்கத்துடன் பயணிப்பதைக் காணலாம். நேரத்தை கருதி பயணிக்கும் இத்தகைய பணியாளர்களின் வாழ்க்கை முக்கியமானது. அவர்களின் ஒட்டுமொத்த நலனைப் பாதுகாக்கும் வகையில், அவர்களுக்கென தனியே நல வாரியம் ஒன்று அமைக்கப்படும் என்பதையும் இன்று அறிவிக்கிறேன்.

பேருந்தில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் திட்டத்திற்கு விடியல் பயணம் என்று பெயர் சூட்டப்பட்டுகிறது. மாநிலம் முழுவதும் அனைத்து அரசு ஆரம்ப பள்ளிகளிலும் ஆகஸ்ட் 25 முதல் காலை உணவுத்திட்டம் விரிவாக்கம் செய்யப்படும். ஆட்டோ ஓட்டுநர்களாக பணிபுரியும் பெண்கள் புதிதாக ஆட்டோ வாங்க ரூ.1 லட்சம் மானியம் வழங்கப்படும். மேலும் 500 மகளிர் பயன்பெறும் வகையிலும், 3ஆம் பாலினத்தவர்களுக்கும் விரிவுபடுத்தப்படும். சென்னை கத்தீட்ரல் சாலையில் உள்ள செங்காந்தன் பூங்காவிற்கு அருகே உள்ள 6.9 ஏக்கள் நிலத்தில் ரூ.25 கோடி செலவில் கலைஞர் நூற்றாண்டு பூங்கா அமைக்கப்படும்.

" என்று தெரிவித்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

 

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்