தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Tamil Live News Updates: 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வுமையம்

Tamil Live News Updates: 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வுமையம்

HT Tamil Desk HT Tamil
Dec 23, 2023 05:23 PM IST

Tamil Live News Updates: இன்றைய (23.12.2023) முக்கிய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்தப் பக்கத்தில் இணைந்திருங்கள்.

பிரேக்கிங் நியூஸ்
பிரேக்கிங் நியூஸ்

ட்ரெண்டிங் செய்திகள்

சமீபத்தில் பிரிஜ் பூஷண் சிங்குக்கு நெருக்கமானவரை மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக தேர்ந்தெடுத்ததற்கு எதிர்ப்புத்தெரிவித்து மல்யுத்த வீராங்கனை சாக்‌ஷி மாலிக் ஓய்வினை அறிவித்தார். அதேபோல், சாக்‌ஷி மாலிக்கிற்கு ஆதரவு தெரிவித்து, பஜ்ரங் புனியா தனக்கு வழங்கப்பட்ட பத்மஸ்ரீ விருதினை திருப்பி அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு

TN Rains: தமிழ்நாட்டில் இன்று முதல் டிசம்பர் 29ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், சென்னையில் இரண்டு நாட்களுக்கு ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

‘’அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அரங்கத்தில் நடைபெறாது"

Alanganallur Jallikattu: மதுரை மாவட்டத்தில், இந்தாண்டு அலங்காநல்லூர் ஜல்லிகட்டு, வழக்கமான இடத்திலேயே நடைபெறும் என்றும் புதிதாக கட்டப்பட்டு வரும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அரங்கத்தில் நடைபெறாது என்றும் மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 

அமைச்சர்கள், திமுக எம்.எல்.ஏக்கள் தங்களது ஒரு மாத ஊதியத்தை நிவாரண நிதியாக வழங்கினர்

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு உதவ முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு, அமைச்சர்கள் மற்றும் திமுக எம்.எல்.ஏக்கள் தங்களது ஒரு மாத ஊதியத்தை மொத்தம் ரூ.1.27 கோடியை முதலமைச்சரிடம் வழங்கினர்.

"பாஜகவின் 9 வருட ஆட்சியே ஒரு தேசிய பேரிடர்தான்" - உதயநிதி

Udhayanidhi Stalin: மழைப் பாதிப்பை தேசியப் பேரிடராக அறிவிக்க சட்டத்தில் இடமில்லை என்ற மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் உதயநிதி, பாஜகவின் 9 வருட ஆட்சியே ஒரு தேசிய பேரிடர் தான் என விமர்சித்துள்ளார். 

போக்குவரத்து தொழிற் சங்கங்களுக்கு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு

TN Bus Transport: ஊதிய உயர்வு கேட்டு வேலை நிறுத்தம் அறிவித்த போக்குவரத்து தொழில் சங்கங்களுக்கு வரும் 27ஆம் தேதி அன்று பேச்சுவார்த்தை நடத்த அரசு அழைப்பு

சிறையில் முதல் வகுப்பு வேண்டும் - யுவராஜ் மனுத்தாக்கல்

Gogulraj Murder case: கோகுல்ராஜ் ஆணவக் கொலை வழக்கில் சிறையில் உள்ள யுவராஜ் தரப்பில் முதல் வகுப்பு தரக் கோரி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்

அமலாக்கத்துறை முன் கார்த்தி சிதம்பரம் ஆஜர்

ED: சீனா நாட்டை சேர்ந்தவர்களுக்கு விசா பெற்று தர 50 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்ற வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு கார்த்தி சிதம்பரம் ஆஜர்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உழவர் தின வாழ்த்து

Formers Day: உழுவார் உலகத்தார்க்கு ஆணி எனும் அளவில் உலகை உய்விக்கும் உயர்குடியாம் உழவர்கள் அனைவருக்கும் தேசிய உழவர்கள் நாள் வாழ்த்துகள்!

பெருமழையால் பயிர்களையும் கால்நடைகளையும் வாழ்வாதாரத்தையும் இழந்துள்ள உழவர்களுக்கு உறுதுணையாக நமது அரசு நின்று காக்கும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உழவர் தின வாழ்த்து

பொன்முடி உடன் மு.க.அழகிரி சந்திப்பு

Ponmudy: சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் பொன்முடியை சைதாப்பேட்டையில் உள்ள இல்லத்திற்கு சென்று முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி சந்தித்து பேசினார்.

உடை உடுத்துவது உங்கள் விருப்பம் 

Siddaramaiah: “ஹிஜாப் தடையை திரும்பப் பெற உத்தரவிட்டுள்ளேன். உடை மற்றும் உணவு அவரவர் விருப்பம் சார்ந்தது. அதை ஏன் எதிர்க்க வேண்டும்? என்ன பிடிக்கிறதோ உடுத்துங்கள். உங்கள் விருப்பம் உங்கள் தேர்வு”- சித்தராமையா

நாளை முதல் மருத்துவ முகாம்

Thoothukudi Floods: “நாளை காலை 9 மணி முதல் 4 மணிவரை 50 இடங்களில் மெகா மருத்துவ முகாம்கள் நடைபெறும்” - அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் இணைந்து தூத்துக்குடியில் இந்த முகாம்களை நடத்த உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

அசாமில் ஆயுதங்கள் பறிமுதல்

Assam: அசாம் மாநிலம் கர்பி அங்லாங் மாவட்டத்தில் உள்ள பொகஜான் பகுதியில் இருவரிடமிருந்து ஏராளமான வெடிமருந்துகள் ம ஏகே ரக துப்பாக்கி மற்றும் இன்சாஸ் ரக துப்பாக்கியின் 150 வெடிமருந்துகள், ஆறு மெகசின்கள் மற்றும் பிற பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்

பைக் ரேஸ்- காவல் துறை எச்சரிக்கை

Bike Race: கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் Racing -ல் ஈடுபட்டால், அவர்கள் மீது வழக்கு பதிந்து கைது நடவடிக்கை எடுக்கப்படும் என கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை எச்சரிக்கை 

எண்ணெய் கழிவு பாதிப்பு-7500 ரூபாய் நிவாரணம் 

 

Ennore: எண்ணூரில் எண்ணெய் கழிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 7500 ரூபாயும், படகுகளுக்கு 10 ஆயிரம் ரூபாயும் நிவாரணம் அறிவிப்பு

தூக்கம் வந்தால் டீ கொடுக்கும் திட்டம்

Road Safety: சாலை பாதுகாப்பு வாரத்தையொட்டி இரவு மற்றும் அதிகாலை நேரத்தில் வாகனங்களை இயக்கும் ஓட்டுநர்களுக்கு இலவசமாக தேனீர் வழங்கும் திட்டத்தை ஒடிசா மாநில அரசு தொடங்கி உள்ளது.

இயக்குநர் பாலச்சந்தர் நினைவுநாள் - நடிகர் கமல்ஹாசன் ட்வீட்

அசாத்தியமான எண்ணிக்கையில் திரைப்படங்களை இயக்கிய திறமையாளர்; எத்தனையோ நடிப்புக் கலைஞர்களைத் திரைக்குத் தந்த திண்மையாளர்; தனக்கென்றிருந்த பாணியிலிருந்து தவறாமல் படைப்புகளைக் கொடுத்தவர் இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர்.

இன்று அவரது நினைவு நாள். என் மனதில் தந்தைக்கு நிகரான இடத்தை வகிக்கும் என் ஆசிரியருடனான தருணங்கள் நினைவில் எழுகின்றன - இயக்குநர் பாலச்சந்தர் நினைவுநாளையொட்டி நடிகர் கமல்ஹாசன் ட்வீட்

சண்டிகரில் முககவசம் அணிவது கட்டாயம்

Covid 19: கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் சண்டிகர் நகரில் முககவசம் அணிவது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது

ஊட்டி மலை ரயில் சேவை தொடக்கம்

மழை மற்றும் மண் சரிவு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஊட்டி மலை ரயில் சேவை 3 நாட்களுக்கு பின்னர் மீண்டும் தொடக்கம்.

நாடாளுமன்றத் தேர்தல் - பிரதமர் மோடி ஆலோசனை

Parlimant Election 2024: பாஜக சார்பில் மக்களவைத் தேர்தல் தொடர்பாக நடைபெறும் 2 நாள் ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பு

பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு

Vaikunda ekadesi: வைகுண்ட ஏகாதேசியை முன்னிட்டு, சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி பெருமாள் கோயிலின் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது

இந்நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

பக்தர்களின் வசதிக்காக குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் 20 இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன

சொர்க்கவாசல் திறப்பு

Vaikunda ekadesi: வைகுண்ட ஏகாதேசியையொட்டி திருச்சி ஸ்ரீரங்கம் பெருமாள் கோயிலில் அதிகாலை 4 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு 

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்