தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Tamil Live News Updates: மத்திய பிரதேச முதல்வராக மோகன் யாதவ் தேர்வு

Tamil Live News Updates: மத்திய பிரதேச முதல்வராக மோகன் யாதவ் தேர்வு

HT Tamil Desk HT Tamil
Dec 11, 2023 05:02 PM IST

Tamil Live News Updates: இன்றைய (11.12.2023) முக்கிய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்தப் பக்கத்தில் இணைந்திருங்கள்.

பிரேக்கிங் நியூஸ்
பிரேக்கிங் நியூஸ்

ட்ரெண்டிங் செய்திகள்

மத்திய பிரதேச முதல்வராக மோகன் யாதவ் தேர்வு

Madhya Pradesh CM: மத்திய பிரதேச மாநிலத்தின் அடுத்த முதல்வராக மோகன் யாதவ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். போபாலில் நடைபெற்ற பாஜக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் புதிய முதல்வராக மோகன் யாதவ் தேர்வானார்.

டிச.14-ல் தேமுதிக செயற்குழு, பொதுக்குழு கூட்டம்

DMDK: தேமுதிக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் வரும் 14 ஆம் தேதி சென்னையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை திருவேற்காடு ஜிபிஎன் பேலஸ் மண்டபத்தில் செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது.

தடம் புரண்ட ரயில் பெட்டிகள் அகற்றம்!

Train Services: செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் தடம் புரண்டு விபத்துக்குள்ளான சரக்கு ரயிலின் 9 பெட்டிகள் முற்றிலுமாக அகற்றப்பட்டுள்ளன. தண்டவாளம் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் விரைவில் விரைவு ரயில்கள் மற்றும் மின்சார ரயில்கள் வழக்கம்போல் இயக்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

பள்ளி பேருந்தில் ஆசிட் கசிந்து 15 மாணவர்கள் பாதிப்பு

School Bus: கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே தனியார் பள்ளி பேருந்தில் ஆசிட் கசிந்ததால் மாணவ, மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். 15க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பள்ளி பேருந்தில் எதற்காக கேனில் ஆசிட் எடுத்துச் செல்லப்பட்டது என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அண்ணாமலை கண்டனம்

Annamalai: நாட்டிலேயே மருத்துவக் கட்டமைப்புக்காக அதிகம் நாடப்பட்ட தமிழகம் இன்று ஊழல் திமுக அரசால் அதளபாதாளத்துக்கு சென்றுள்ளது" என்று சென்னையில் இறந்த குழந்தையின் உடலை அட்டைப் பெட்டிக்குள் வைத்து கொடுக்கப்பட்ட சம்பவத்துக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

25 மீனவர்களை விடுவிக்கக் கோரி முதல்வர் கடிதம்

CM MK Stalin: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 25 மீனவர்களை விடுவிக்கக் கோரி தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதி உள்ளார்.

மகுவா மொய்த்ரா உச்ச நீதிமன்றத்தில் மனு

Mahua Moitra: எம்.பி. பதவியில் இருந்து நீக்கப்பட்டதற்கு எதிராக, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மகுவா மொய்த்ரா உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அதானி நிறுவனங்கள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க பணம் பெற்றதாக எழுந்த புகாரில், மகுவா மொய்த்ராவை பதவி நீக்கம் செய்து மக்களவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நகைக்கடையில் கொள்ளை அடித்தவர் கைது

Covai: கோவை ஜோஸ் ஆலுகாஸ் நகைக்கடையில் கொள்ளை அடித்த கொள்ளையன் விஜய் என்பவரை போலீசார் கைது செய்தனர். 

திமுக எம்.எல்.ஏவை கைது செய்ய வேண்டும் - மருத்துவர் ராமதாஸ்

DMK vs PMK: அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்திய சென்னை ஆர்.கே.நகர் திமுக எம்.எல்.ஏ எபினேசரை வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும் பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

Article 370 verdict: ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து தொடர்பான தீர்ப்பு விவரங்கள்:-

  • ஜம்மு காஷ்மீரை இரண்டாக பிரித்து லடாக்கை யூனியன் பிரதேசமாக மாற்றியது செல்லும்.
  • ஜம்மு காஷ்மீருக்கு விரைந்து மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கி, 2024 செப்டம்பருக்குள் அங்கு தேர்தல் நடத்த வேண்டும்- தலைமை நீதிபதி.
  • "இந்தியாவுடன் இணைந்த பிறகு தனது முழுமையான இறையாண்மையை காஷ்மீர் இழந்து விடுகிறது"
  • "இந்திய அரசியலமைப்போடு இணைந்ததுதான் காஷ்மீர் அரசியலமைப்பு"
  • "ஜம்மு காஷ்மீருக்கு என்று தனி இறையாண்மையோ, ஆட்சி உரிமையோ இருக்க முடியாது" - தலைமை நீதிபதி.
  • ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியலமைப்புச் சட்டம் 370வது பிரிவு தற்காலிகமானது - தலைமை நீதிபதி
  • அரசியலமைப்புச் சட்டம் 370வது பிரிவு நிரந்தரமானது அல்ல.
  • 370வது சட்டப்பிரிவை நீக்க குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் உண்டு.
  • ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியலமைப்புச் சட்டம் 370வது பிரிவு போர் சூழல் காரணமாக ஏற்படுத்தப்பட்ட தற்காலிக ஏற்பாடு - உச்சநீதிமன்றம்.

சட்டப்பிரிவு 370 நீக்கம் - 3 விதமான மாறுபட்ட தீர்ப்புகள் 

article 370 verdict: ஜம்மூ காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம் தொடர்பாக மூன்று விதமான மாறுபட்ட தீர்ப்புகளை உச்சநீதிமன்றம் வழங்கி உள்ளது.

விஜயகாந்த் டிஸ்சார்ஜ்

Vijayakanth Health: கடந்த நவம்பர் 18ஆம் தேதி முதல் சென்னை மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் பூரண குணம் அடைந்து வீடு திரும்பியதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை

சென்னைக்கு செல்ல தாமதம்

Railway: செங்கல்பட்டு - சென்னை கடற்கரை இடையிலான ரயில் சேவை நிறுத்தப்பட்டதை அடுத்து, செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையத்தில் ஏராளமான பயணிகள் காத்திருப்பு.

ஒரே நேரத்தில் அதிக மக்கள் குவிந்துள்ளதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

செங்கல்பட்டு ரயில் நிலையம் அருகே சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதால், சென்னை கடற்கரையில் இருந்து சிங்கப்பெருமாள் கோவில் வரை மட்டுமே புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்படுகிறது.

கும்பக்கரை அருவியில் 39 வது நாளாக குளிக்க தடை

Rain: தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க 39வது நாளாக தடை 

சென்னைக்கு வரும் ரயில்கள் தாமதம்!


Railway: செங்கல்பட்டில் சரக்கு ரயில்கள் தடம் புரண்ட நிலையில், சென்னை நோக்கி வரும் புறநகர் ரயில்கள் சேவை பாதிப்பு

சபரிமலை தரிசன நேரம் நீட்டிப்பு

sabarimalai: சபரிமலையில் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளதால் தரிசன நேரம் இன்று முதல் ஒரு மணி நேரம் நீட்டிப்பு; பிற்பகல் 4 மணிக்கு பதிலாக 3 மணிக்கே நடை திறக்கப்படுகிறது.

ஜம்மூ காஷ்மீர் விவகாரம் - இன்று தீர்ப்பு 

Kashmir 370: ஜம்மூ காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது.

20 சதுர கி.மீக்கு கச்சா எண்ணெய்

CPCL: சிபிசிஎல் நிறுவனத்தில் இருந்து வெளியேறிய கச்சா எண்ணெய் 20 சதுர கி.மீ பரப்பளவுக்கு பரவியது என ஹெலிகாப்டர் மூலம் நடத்தப்பட்ட சோதனையில் தகவல்.

7 நாள் விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறப்பு 

Cyclone Michaung: ஒரு வார மழை விடுமுறைக்கு பின் 4 மாவட்டங்களில் பள்ளிகள் இன்று திறக்கப்படுகின்றன.

ரயில் தடம் புரண்டது

Chengalpattu: செங்கல்பட்டில் சரக்கு ரயில் புரண்டதால் தென் மாவட்டங்களுக்கு ரயில்களை இயக்க தாமதம்.

இன்று முதல் சான்றிதழ் சிறப்பு முகாம்

Cyclone Michaung: புயல் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் அரசு மற்றும் கல்வி சான்றிதழ்களை பெற இன்று முதல் சிறப்பு முகாம்; சென்னையில் மட்டும் நாளை நடைபெறுகிறது.

இன்று வருகிறது மத்திய குழு

Cyclone Michaung: மிக்ஜாம் புயல் வெள்ள பாதிப்புகளை பார்வையிட தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் ஆலோசகர் குணால் சத்தியார்த்தி தலைமையிலான குழு இன்று தமிழகம் வருகை.

IPL_Entry_Point

டாபிக்ஸ்