தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Land Subsidy : விவசாயிகளுக்கு நில மானியமா! எங்கு வழங்கப்படுகிறது?

Land Subsidy : விவசாயிகளுக்கு நில மானியமா! எங்கு வழங்கப்படுகிறது?

Priyadarshini R HT Tamil
Jan 29, 2023 01:39 PM IST

பட்டியலின விவசாயிகள் விளைநிலம் வாங்க மானியம் வழங்கப்படுகிறது.

கோப்புப்படம்
கோப்புப்படம்

ட்ரெண்டிங் செய்திகள்

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி, மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலம் பட்டியலின மக்களின், சமூக பொருளாதார நிலை மேன்மையடைய சொந்தமாக விவசாய நிலம் வாங்கி விவசாயம் செய்வதற்கு மானியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. 

இந்தத் திட்டத்தின் கீழ் நிலத்தின் சந்தை மதிப்பில் 50% அல்லது அதிகபட்சமாக ரூ. 5 லட்சம் மானியம் வழங்கப்படும்.

வேலூர் மாவட்டத்துக்கு 3 ஆதிதிராவிடர் விவசாயிகளுக்கு ரூ. 15 லட்சம் மானியமும், ஒரு பழங்குடியின விவசாயிக்கு ரூ. 5 லட்சம் மானியமும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க விவசாயிகள் 18 முதல் 65 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். 

விண்ணப்பதாரர் நிலம் வாங்க உத்தேசித்துள்ள நிலம் 2.5 ஏக்கர் நஞ்சை நிலம் அல்லது 5 ஏக்கர் புஞ்சை நிலமாக இருக்கலாம். நிலத்தை விற்பவர் ஆதிதிராவிடர், பழங்குடியினராக இருக்கக் கூடாது. வாங்கப்படும் விவசாய நிலங்களுக்கு 100% முத்திரைத்தாள், பதிவுக் கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்படும்.

இந்த திட்டத்துக்கு தகுதியுள்ள ஆதிதிராவிடர், பழங்குடியின விவசாயிகள் தாட்கோவின் www.tahdco.com என்ற இணையத ளத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

இதுகுறித்து அந்தந்த மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகங்களில் கூடுதல் விவரங்கள் பெறலாம். 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்