தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Ht Explainer: திடீர் காய்ச்சலா? ஃப்ளுவா? மலேரியாவா? கொரேனாவா? குழப்பம் வேண்டாம் விளக்கம் இதோ!

HT Explainer: திடீர் காய்ச்சலா? ஃப்ளுவா? மலேரியாவா? கொரேனாவா? குழப்பம் வேண்டாம் விளக்கம் இதோ!

Priyadarshini R HT Tamil
Apr 30, 2023 10:51 AM IST

Covid 19 Update: கோவிட் - 19, ஹெச்3என்2 இன்புளுயன்சா, மலேரியா ஆகிய மூன்று காய்ச்சலுக்கும் ஒரே மாதிரியான அறிகுறிகள்தான் தோன்றும். இதனால், மூன்றில் எது என்று குழப்பங்கள் ஏற்படும். அதனால் அவற்றை எப்படி நீங்கள் வேறுபடுத்தி தெரிந்துகொள்வது என்று இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.

கோப்புப்படம்
கோப்புப்படம்

ட்ரெண்டிங் செய்திகள்

இவை மூன்றும் வெவ்வேறு வழிகளில் ஒருவருக்கு ஏற்படும் தொற்று வியாதிகள்தான். அனைத்து வியாதிக்கும் முதன்மையான அறிகுறியாக இருப்பது காய்ச்சல் மற்றும் உடல் வலிதான். நன்றாக உற்று கவனத்தால்தான் அவை மூன்றிற்கும் உள்ள வேறுபாடுகளை நாம் தெரிந்துகொள்ள முடியும். கோவிட் - 19, மலேரியா மற்றும் இன்புளுயன்சாவுக்கும் இடையே உள்ள வேறுபாடுகளை தெரிந்துகொள்வோம்.

தொற்றும் விதம்

மலேரியா, முற்றிலும் கோவிட் - 19 மற்றும் ஹெச்3என்2வில் இருந்து வேறுபட்ட முறையில் தொற்றுகிறது. இது ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவுவதில்லை. மலேரியா கொசுவால் பரவும் காய்ச்சல், அனொஃபிளிஸ் என்ற பெண் கொசு கடிப்பதால் ஏற்படுகிறது. பிளாஸ்மோடியம் என்ற ஒட்டுண்ணி இந்த காய்ச்சலை ஏற்படுத்துகிறது. பாதிக்கப்பட்ட நபரை கடித்த கொசு மற்றொருவரை கடிக்கும்போது மலேரியா பரவுகிறது. மாறாக, சார்ஸ் கோவி - 2 என்ற வைரஸ், கோவிட் - 19 என்ற சுவாசத்தின் சளித்துளிகள் மூலம் அனைவருக்கும் எளிதாக பரவிவிடுகிறது. பாதிப்பு ஏற்பட்டவர்கள் நடமாடிய பகுதிகளிலிருந்தும் எளிதாக பரவி விடுகிறது.

அறிகுறிகள்

காய்ச்சல், தலைவலி, சோர்வு, உடல் வலி ஆகியவை அனைத்து காய்ச்சலுக்கும் பொதுவான அறிகுறிகள்தான். சில அறிகுறிகள் இவை ஒவ்வொன்றுக்கும் மாறுபடும். மலேரியாவில் உடல் குளிர்ச்சி, தசை வலி, வாந்தி, மயக்கம் மேற்குறிப்பிட்ட அறிகுறிகளுடன் இருக்கும். இவற்றிற்கு முறையான சிகிச்சை அளிக்கவில்லையென்றால், அனீமீயா, சிறுநீரக செயலிழப்பு, பெருமூளை மலேரியா ஏற்பட்டு உயிருக்கே ஆபத்தாகிவிடும். அதேநேரத்தில் கோவிட் - 19 மற்றும் ஹெச்3என்2 இன்புளுயன்சாவில் காய்ச்சல், இருமல், சோர்வு, தொண்டை வலி மற்றும் சளி ஆகியவை முதன்மை அறிகுறிகள் ஆகும். கோவிட் - 19ல் கூடுதல் அறிகுறிகளாக சுவையின்மை மற்றும் வாசனை இழப்பு மற்றும் மூச்சுத்திணறல் ஆகியவை சேர்ந்திருக்கும்.

நோய் அறிகுறி தோன்றும் கால அளவு

நோய் அறிகுறி தோன்றும் கால அளவு இந்த மூன்று காய்ச்சல்களையும் வேறுபடுத்தி காட்டுவதில் முக்கிய பங்காற்றுகிறது. கோவிட் - 19 அறிகுறிகள் 2 முதல் 14 நாட்கள் வரை இருக்கும். குறைந்தபட்சம் 2 முதல் 6 நாட்கள் இருக்கும். ஹெச்3என்2 ஃப்ளு வைரஸ் தொற்று 1 முதல் 4 நாட்கள் வரை இருக்கும். ஆனால் மலேரியாவின் நோய் அறிகுறிகள் தோன்றும் கால அளவு 7 நாட்கள் முதல் பல மாதங்கள் வரை தொடரும்.

சிகிச்சை முறைகள்

மூன்றுக்கும் வெவ்வேறு சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன. மலேரியாவுக்கு ஆன்டி மலேரியா மருந்துகள் வழங்கப்படுகிறது. கூடுதலாக கொசு உற்பத்தியை குறைக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மாறாக கோவிட் - 19க்கு மருந்து, தடுப்பு மருந்து மற்றும் கூடுதல் கவனம் ஆகிய அனைத்தும் நீண்ட நாட்களுக்குத் தேவைப்படுகிறது. ஹெச்3என்2வுக்கு ஆன்டி வைரல் மருந்துகள் பயன்படுத்தப்பட்டு காய்ச்சல், ,ருமல் மற்றும் தொண்டை வலி ஆகியவை சரிசெய்யப்படுகிறது.

தொற்றுக்களுக்குத் தேவையான பரிசோதனைகள்

மூன்றுக்கும் வெவ்வேறு வகையான பரிசோதனைகள் தேவைப்படுகின்றன. ரத்தப்பரிசோதனைகள் மலேரியாவுக்கு செய்யப்படுகின்றன. அதில் மலேரியா தொற்று ஏற்படுத்தும் கிருமி உள்ளதா என்று கண்டுபிடிக்கப்படும். மாறாக, பிசிஆர், ஆன்டிஜென் பரிசோதனைகள் இந்த சார்ஸ் வகையைச் சேர்ந்த வைரஸ்களுக்கு செய்யப்படுகிறது. கோவிட் - 19க்கு பிசிஆர் பரிசோதனை தேவைப்படுகிறது.

பலரின் உயிரையும் பறிக்கும் ஆபத்துடைய இந்த மூன்று காய்ச்சல்களிலும் ஒரே மாதிரியான அறிகுறிகள் தோன்றி நம்மை குழப்பும். எனவே காய்ச்சல் ஏற்பட்டு மூன்று நாட்களுக்கு மேல் அவை தொடர்ந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி உங்களுக்கு என்ன காய்ச்சல் ஏற்பட்டுள்ளது என்பதை தெரிந்துகொண்டு அவற்றிற்கு சரியான மருந்தை உட்கொள்வது மிக நல்லது. எனவே ஆரோக்கியமான வாழ்க்கைக்கு தேவையான நடைமுறைகளை கடைபிடியுங்கள்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

Google News: https://bit.ly/3onGqm9

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்