தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Student Suicide : ஒழுங்காக படி என்று கூறியதால் சிறுவன் எடுத்த விபரீத முடிவு

Student Suicide : ஒழுங்காக படி என்று கூறியதால் சிறுவன் எடுத்த விபரீத முடிவு

Priyadarshini R HT Tamil
Apr 02, 2023 07:39 AM IST

ஒழுங்காக படிக்கும்படி பெற்றோர் கூறியதால் மனமுடைந்த 9ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

தற்கொலை செய்துகொண்ட சிறுவன் ரிஷி
தற்கொலை செய்துகொண்ட சிறுவன் ரிஷி

ட்ரெண்டிங் செய்திகள்

இவர் குளியல் அறைக்குள் சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். ரிஷி குளியல் அறைக்குள் சென்று நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அவரது தாய் மற்றும் அண்ணன் இருவரும் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்தனர். அப்போது ரிஷி தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். 

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த சாத்தாங்காடு இன்ஸ்பெக் டர் ஜெய்சங்கர் தலைமையிலான போலீசார் ரிஷி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ரிஷிக்கு சரியாக படிப்பு வராதாம். இதனால் அவரை ஒழுங்காக படிக்கும் படி அவரது பெற்றோரும், உறவினர்களும் அவருக்கு அடிக்கடி அறிவுரை கூறி வந்துள்ளனர். இதனால் மனமுடைந்த அவர் தற்கொலை செய்ததாக தெரிகிறது.மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

வாழ்க்கையில் வரும் கவலைகளும், துன்பங்களும் நிரந்தமானது அல்ல. அவற்றை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம்அதை எதிர்கொள்வதில் தான் உள்ளது. தற்கொலை எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கையை மகிழ்வாய் வாழும் வழிகளை கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். ஒருவேளை உங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உருவானாலோ அதிலிருந்து மீண்டும் வர கீழ்காணும் எண்களை 

அழைக்கலாம். 

மாநில உதவி மையம் :104

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,

எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,

சென்னை - 600 028.

தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்