தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  பள்ளி மாணவர்களுக்கு மாநில விளையாட்டு போட்டிகள் – விவரங்கள் என்ன?

பள்ளி மாணவர்களுக்கு மாநில விளையாட்டு போட்டிகள் – விவரங்கள் என்ன?

Priyadarshini R HT Tamil
Feb 25, 2023 01:44 PM IST

School Children: பள்ளிகளில் மண்டல அளவிலான போட்டிகளில் பங்குபெற்று முதல் இரண்டு இடங்களை பிடித்த 375 மாணவர்கள், சென்னை நேரு வெளி விளையாட்டு அரங்கில் வரும் 27, 28 ஆகிய தேதிகளில் நடைபெறும் மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள் மற்றும் கலைநிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள உள்ளனர்.

கோப்புப்படம்.
கோப்புப்படம்.

ட்ரெண்டிங் செய்திகள்

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது - 

தமிழக அரசின் முன் முயற்சியாக சமூக துறையின் கீழ் இயங்கும் அரசு மற்றும் 147 அரசு நிதி உதவிபெறும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் உள்ள குழந்தைகளின் திறமைகளை கண்டறிந்து அவர்களை ஊக்குவிக்க மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடத்த 825 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

அதன்படி, தமிழகத்தின் 38 மாவட்டங்களும் சென்னை, ராணிப்பேட்டை, தங்சாவூர், தட்டப்பாறை (தூத்துக்குடி) என நான்கு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, மண்டல அளவிலான விளையாட்டு போட்டிகள் மற்றும் கலைநிகழ்ச்சிகள் கடந்த டிசம்பர் மாதத்தில் நடைபெற்றன.

மண்டல அளவிலான விளையாட்டு போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகளில் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல் உள்ளிட்ட தனிநபர் பிரிவு போட்டிகளும் கைப்பந்து, கபடி, பூப்பந்து உள்ளிட்ட குழு விளையாட்டு போட்டிகளும் தனித்தனியே சிறுவர் மற்றும் சிறுமியர்களுக்கு நடத்தப்பட்டன. பேச்சு, பாடல், ஓவியம் மற்றும் நடனம் ஆகிய கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன. சென்னை மண்டல அளவிலான போட்டிகளில் 960 குழந்தைகளும், ராணிப்பேட்டை மண்டல அளவிலான போட்டிகளில் 700 குழந்தைகளும், தஞ்சாவூர் மண்டல அளவிலான போட்டிகளில் 980 குழந்தைகளும், தட்டப்பாறை (தூத்துக்குடி) மண்டல அளவிலான போட்டிகளில் 820 குழந்தைகளும் கலந்துகொண்டனர்.

மண்டல அளவிலான போட்டிகளில் பங்குபெற்று முதல் இரண்டு இடங்களை பிடித்த 375 குழந்தைகள் மற்றும் 150 இல்ல பணியாளர்கள் சென்னை, நேரு வெளி விளையாட்டு அரங்கில் வரும் 27, 28 ஆகிய தேதிகளில் நடைபெறும் மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள் மற்றும் கலைநிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள உள்ளனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்