Weather Update : மக்களே.. இன்று இந்த பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்காம்!-southeastern districts and delta districts may receive rain - HT Tamil ,தமிழ்நாடு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Weather Update : மக்களே.. இன்று இந்த பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்காம்!

Weather Update : மக்களே.. இன்று இந்த பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்காம்!

Divya Sekar HT Tamil
Jan 20, 2024 07:05 AM IST

தென்தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மழைக்கு வாய்ப்பு
மழைக்கு வாய்ப்பு

சில தினங்களாக அதிகாலை நேரத்தில் பல பகுதிகளில் உறை பனி அதிகமாகவே இருந்தது. இதற்கிடையே தமிழ்நாட்டில் மீண்டும் மழை பெய்ய உள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் பரவலாக அடுத்த இரண்டு நாட்களில் மழை பெய்யும் என்று வானிலை மையம் அலர்ட் செய்துள்ளது.

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தென்தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.

21.01.2024 முதல் 25.01.2024 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

உறைபனி எச்சரிக்கை

 20.01.2024: தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் இரவு வேளையில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31-32 டிகிரி செல்சியஸை ஒட்டியும் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 21-22 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):

வேதாரண்யம் (நாகப்பட்டினம்) 1.

மீனவர்களுக்கான எச்சரிக்கை: ஏதுமில்லை.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.