தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Vengaivasal Water Tank Issue: வேங்கை வயல் விவகாரத்தில் மனிதகழிவு குறித்து அதிர்ச்சி தகவல் வெளியானது!

Vengaivasal Water Tank Issue: வேங்கை வயல் விவகாரத்தில் மனிதகழிவு குறித்து அதிர்ச்சி தகவல் வெளியானது!

Pandeeswari Gurusamy HT Tamil
Apr 21, 2023 09:13 AM IST

Pudukkottai: தற்போது அந்த நீரின் சோதனை முடிவுகள் வெளியாகி உள்ளது. இதில் ஒரு பெண் மற்றும் 2 ஆண்களின் மனிதக்கழிவு கலக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

வேங்கைவயல் மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி
வேங்கைவயல் மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி

ட்ரெண்டிங் செய்திகள்

புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் வேங்கை வயல் கிராமத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 26ஆம் தேதி பட்டியல் சமூக மக்கள் பயன்படுத்தும் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் மனித கழிவு கிடந்துள்ளது. இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதை கண்டித்து பல்வேறு அரசியல் கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தியது.

இதுகுறித்து வெள்ளனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 75 பேரிடம் விசாரணை நடத்தினர். பின்னர் மத்திய மண்டல ஐஜி கார்த்திக்கேயன் உத்தரவின் பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை விரைவில் கண்டுபிடிக்க புதுக்கோட்டை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ரமேஷ் தலைமையில், 2 காவல் துணை கண்காணிப்பாளர்கள், 4 காவல் ஆய்வாளர்கள் மற்றும் 4 காவல் உதவி ஆய்வாளர்கள் கொண்ட சிறப்பு புலனாய்வுக்குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் கண்டறிய வழக்கின் விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

அதன்படி கடந்த மூன்று மாத காலமாக சிபிசிஐடி போலீசார் வேங்கை வயல் இறையூர் முத்துக்காடு ஆகிய பகுதியிலுள்ள 147 நபர்களிடம் விசாரணை செய்து சாட்சியங்களை பதிவு செய்திருந்தனர்.

இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கில் முன்னேற்றம் ஏதும் ஏற்படாததால், ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஒரு விசாரணை ஆணையத்தையும் அமைத்துள்ளது. விரைவில் அந்த ஆணையம் விசாரணை செய்யும் என்றும் அதற்கு தமிழக அரசு வேண்டிய ஏற்பாடுகளை ஆணையத்திற்கு செய்து கொடுக்கும் என்றும் நேற்று சட்டசபையில் முதல்வர் அறிவித்தார்.

இதற்கிடையில் ஏற்கனவே மேல் நிலை நீர் தேக்க தொட்டி நீரை சோதனை செய்ய பகுப்பாய்வு மையத்திற்கு அனுப்பப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது அந்த நீரின் சோதனை முடிவுகள் வெளியாகி உள்ளது. இதில் ஒரு பெண் மற்றும் 2 ஆண்களின் மனிதக்கழிவு கலக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 

இந்த விவகாரத்தில் ஏற்கனவே டிஎன்ஏ சோதனை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் டிஎன்ஏ சோதனை முடிவு வெளியாகும் போது குற்றவாளிகள் அடையாளம் காணப்படுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

Google News: https://bit.ly/3onGqm9

IPL_Entry_Point

டாபிக்ஸ்