தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  மசாஜ் செய்ய வந்த அமெரிக்க பெண்ணிடம் இப்படியா? ஊழியர் செய்த அசிங்கம்

மசாஜ் செய்ய வந்த அமெரிக்க பெண்ணிடம் இப்படியா? ஊழியர் செய்த அசிங்கம்

Priyadarshini R HT Tamil
Apr 02, 2023 08:10 AM IST

Body Massage Centre: சின்ன முதலியார் சாவடியில் உள்ள மசாஜ் சென்டரில் மசாஜ் செய்ய வந்த அமெரிக்க பெண்ணிடம் பாலியலில் சீண்டலில் ஈடுபட்ட ஊழியர் கைது செய்யப்பட்டார்.

கோப்புப்படம்.
கோப்புப்படம்.

ட்ரெண்டிங் செய்திகள்

சுற்றுலா வரும் வெளி நாட்டுப் பயணிகளும் இங்குள்ள மசாஜ் சென்டர்களில் மசாஜ் எடுத்துக்கொள்வது வழக்கம். ஏனெனில் இங்கு சில இடங்களில் மூலிகை மற்றும் ஆயுர்வேத மசாஜ்கள் செய்யப்படும். அவை வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு புது மசாஜ் அனுபவத்தை கொடுக்கும். தற்போது கோடை காலம் மற்றும் விடுமுறைகள் வருவதால் சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. 

அதுபோல் உள்ள மசாஜ் சென்டர்களில் பெண்களிடம் அவ்வப்போது பாலியல் அத்துமீறல் சம்பவங்களும் நடைபெறும். இதேபோன்ற சம்பவம் ஒன்று தற்போது நடைபெற்றுள்ளது. அதில், சின்ன முதலியார் சாவடியில் உள்ள மசாஜ் சென்டரில் அமெரிக்க பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஊழியர் கைது செய்யப்பட்டார்.

விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் நகராட்சிக்கு உட்பட்ட சின்ன முதலியார் சாவடி கடற்கரை பகுதிகளிலும் தங்கும் விடுதி மற்றும் மசாஜ் சென்டர்கள் உள்ளன. 

இந்தநிலையில் புதுச்சேரி மற்றும் ஆரோவில் பகுதிகளுக்கு சுற்றுலா வந்த அமெரிக்காவை சேர்ந்த 35 வயது பெண் மசாஜ் செய்வதற்காக சின்ன முதலியார் சாவடி கடற்கரை பகுதியில் உள்ள மசாஜ் சென்டருக்கு சென்றார்.

அப்போது மசாஜ் சென்டரில் பணியாற்றி வரும் ரெக்கீஸ் என்பவர் அந்த பெண்ணின் உடலில் ஆயில் தடவி மசாஜ் செய்ததாக கூறப்படுகிறது. அப்போது அவர் அந்த பெண்ணிடம் பாலியல் 

அத்து மீறலில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதுகுறித்து கோட்டக் குப்பம் அனைத்து மகளிர் போலீசில் அமெரிக்க பெண் புகார் கொடுத்தார். 

இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா உத்தரவின் பேரில், சப்-இன்ஸ்பெக்டர் சுகன்யா வழக்குப்பதிவு செய்து மசாஜ் சென்டர் ஊழியர் ரெக்கீசை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்