தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Senthil Balaji : அமைச்சர் செந்தில் பாலாஜி சிகிச்சையும், திருக்குறள் உவமையும் – மருத்துவர் கிண்டல்

Senthil Balaji : அமைச்சர் செந்தில் பாலாஜி சிகிச்சையும், திருக்குறள் உவமையும் – மருத்துவர் கிண்டல்

Priyadarshini R HT Tamil
Jun 17, 2023 12:43 PM IST

Senthil Balaji : அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அளிக்கப்படும் சிகிச்சைகளை சென்னை கிண்டி மருத்துவமனையில் பொறிக்கப்பட்டுள்ள திருக்குறளுடன் ஒப்பிட்டு மருத்துவர் புகழேந்தி கிண்டல் செய்துள்ளார்.

கோப்புப்படம்
கோப்புப்படம்

ட்ரெண்டிங் செய்திகள்

உற்றான் அளவும் பிணியளவும் காலமும்,

கற்றான் கருதிச் செயல்.

நோயாளியின் வயது, நோயின் தன்மை, மருத்துவத்திற்கான காலம் உள்ளிட்டவற்றை பகுத்தாய்ந்து மருத்துவர் செயல்பட வேண்டும் என்பது இந்த திருக்குறளின் பொருள். கலைஞரின் திருக்குறள் விருப்பத்தை தற்போதைய முதல்வர் நிறைவேற்றியுள்ளது வரவேற்கத்தக்கது.

எனினும், அமைச்சர் செந்தில் பாலாஜியின், இதய பிரச்னையில் இந்த திருக்குறள் வாசகங்கள் கடைபிடிக்கப்பட்டதா?

செந்தில் பாலாஜி வயது – 47

இந்த வயதில் இதய ரத்தக்குழாய்களில் அடைப்பு எற்படுவது இயற்கையே. அதை முறையாக ஆராயாமல் அறுவைசிகிச்சைக்கு பரிந்துரைப்பது சரியாகுமா?

நோயின் தன்மை

இதயத்தின் 3 ரத்தக் குழாய்களிலும் அடைப்பு ஏற்படுவது 47 வயதில் சாத்தியமே, அடைப்பின் அளவைப் பொறுத்தே, அதாவது அடைப்பின் சதவீதம் (80 சதவீதத்திற்கு மேல் இருந்தால் மட்டுமே, அறுவைசிகிச்சை தேவைப்படலாம்) வைத்தும், இதயம் ஒருமுறை சுருங்கி விரியும்போது எவ்வளவு சதவீதம் ரத்தம் வெளியேற்றப்படுகிறது? Ejection Fraction-60 சதவீதத்துக்கு மேல் வழக்கமாக அது இருக்க வேண்டும். (அது மிகக் குறைவாக இருந்தால் அறுவைசிகிச்சை தேவைப்படலாம்)

இவையிரண்டும் அரசு ஓமந்தூரார் மருத்துவனை அறிக்கையில் இருக்க வேண்டும் என இருந்தும் அவை இல்லாமல் இருப்பதிலிருந்து நோயின் தன்மை முறையாக ஆராயப்படவில்லை என்பது தெளிவு.

மருத்துவத்திற்கான காலம்

ஓமந்தூரார் மருத்துவர்கள் அமைச்சருக்கு 3 ரத்தக் குழாய்களில் அடைப்பு இருந்ததால்,உடனடியாக பைபாஸ் அறுவைசிகிச்சை தேவைப்படுகிறது என தெரிந்தும், ரத்தம் உறையா மருந்துகளை பரிந்துரைத்ததால் உடனடியாக இதய அறுவைசிகிச்சை செய்ய முடியாது எனத் தெரிந்தும், ரத்தம் உறைவதைத் தடுக்கும் மருந்துகளை (ஹெப்பாரின் ஊசி, ஆஸ்ப்பிரின் மாத்திரை) கொடுத்ததால், அமைச்சருக்கு உனடியாக அறுவைசிகிச்சை செய்ய முடியாமல், மருந்துகள் தற்போது நிறுத்தப்பட்ட நிலையில், அறுவைசிகிச்சையில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

உடனடி அறுவைசிகிச்சை தேவைக்கு ரத்தம் உறைதலை தடுக்கும் மருந்துகளை கொடுத்தால் அடுத்த சில நாட்களுக்கு (கால அளவு, ரத்தம் உறைதலை தடுக்கும் மருந்துகளை நிறுத்திய 3-5 நாட்கள் கழித்தே அறுவைசிகிச்சை மேற்கொள்ள முடியும் என தெரிந்தும்) அறுவைசிகிச்சையை மேற்கொள்ள முடியாது என இருந்தும், உடனடி அறுவைசிகிச்சையை பரிந்துரைத்த நிலையில், ரத்தம் உறைதலைத் தடுக்கும் மருந்துகளையும் கொடுத்தது, சிகிச்சையின் கால அளவை தீர்மானிப்பதில் அரசு ஓமந்தூரார் மருத்துவமனை மருத்துவர்கள் தவறு இழைத்துவிட்டார்களா என்ற சந்தேகத்தை எழுப்புகிறது.

எனினும், கலைஞர் போற்றும் திருக்குறள் நெறிமுறைகள் அமைச்சர் செந்தில் பாலாஜி இதயப் பிரச்னையில் கடைபிடிக்கப்படவில்லை என்பது மட்டும் தெளிவாக உள்ளது என்று மருத்துவர் புகழேந்தி கிண்டலாக பதிவிட்டுள்ளார். அந்தப்பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

IPL_Entry_Point

டாபிக்ஸ்