Tamil Top 10 News: சத்துணவு முட்டையில் ஆம்லெட் போட்ட ஹோட்டல் முதல் சூட்கேஸில் பெண்ணின் உடல் வரை - டாப் 10 நியூஸ்!-school eggs used in hotel woman murder in chennai and other top 10 news with 19th september 2024 - HT Tamil ,தமிழ்நாடு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Tamil Top 10 News: சத்துணவு முட்டையில் ஆம்லெட் போட்ட ஹோட்டல் முதல் சூட்கேஸில் பெண்ணின் உடல் வரை - டாப் 10 நியூஸ்!

Tamil Top 10 News: சத்துணவு முட்டையில் ஆம்லெட் போட்ட ஹோட்டல் முதல் சூட்கேஸில் பெண்ணின் உடல் வரை - டாப் 10 நியூஸ்!

Karthikeyan S HT Tamil
Sep 19, 2024 02:10 PM IST

Afternoon Tamil Top 10 News: சத்துணவு முட்டை விவகாரம், டெங்கு காய்ச்சலால் சிறுவன் பலி, சூட்கேஸில் பெண்ணின் சடலம் உள்பட டாப் 10 செய்திகளை இந்த தொகுப்பில் காணலாம்.

Tamil Top 10 News: சத்துணவு முட்டையில் ஆம்லெட் போட்ட ஹோட்டல் முதல் சூட்கேஸில் பெண்ணின் உடல் வரை - டாப் 10 நியூஸ்!
Tamil Top 10 News: சத்துணவு முட்டையில் ஆம்லெட் போட்ட ஹோட்டல் முதல் சூட்கேஸில் பெண்ணின் உடல் வரை - டாப் 10 நியூஸ்!

சத்துணவு முட்டையை வாங்கி ஆம்லெட் போட்ட ஹோட்டலுக்கு சீல்!

திருச்சி அருகே துறையூரில் அரசு பள்ளி குழந்தைகளுக்கு மதிய உணவுக்காக வழங்கப்படும் சத்துணவு முட்டைகளை குறைந்த விலைக்கு வாங்கி, ஆம்லெட், ஆப்பாயில் என தயாரித்து அதிக விலைக்கு விற்பனை செய்ததாக தனியார் உணவம் மீது புகார் எழுந்தது. இதையடுத்து முட்டைகளை விற்பனை செய்த சத்துணவு அமைப்பாளர் வசந்தகுமாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். உணவகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

சிறையில் கைதி தற்கொலை முயற்சி

கடந்த 2013ம் ஆண்டு அத்வானி மதுரை வருகையின் போது பைப் வெடிகுண்டு வைக்க திட்டமிட்டதாக கைதான ஷாகிர் என்பவர் சிறையில் தற்கொலைக்கு முயன்றுள்ளார். பூவிருந்தவல்லி கிளைச்சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர், எறும்பு மருந்தை சாப்பிட்டுள்ளார். சுய நினைவை இழந்த அவர் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

2 தியேட்டர்களுக்கு சீல் வைத்த சென்னை மாநகராட்சி

6 ஆண்டாக வரி கட்டாமல் நிலுவையில் வைத்துள்ள நங்கநல்லூர் வெற்றிவேல், வேலன் ஆகிய 2 திரையரங்குகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. 2 திரையரங்குகளுக்கு சென்னை மாநகராட்சி ஆலந்தூர் மண்டல அதிகாரிகள் சீல் வைத்தனர். 2018-ல் இருந்து திரையரங்குகளின் உரிமையாளர்கள் மாநகராட்சி நிர்வாகத்துக்கு ரூ.60 லட்சம் வரி தொகையை பாக்கி வைத்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. மாநகராட்சி அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கியும் பலமுறை நேரில் சென்று கூறியும் வரி செலுத்தாததால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறை சாத்தியமற்றது - முதல்வர் ஸ்டாலின்

ஒரே நாடு ஒரே தேர்தல் முறை கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது. ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறை பாஜகவில் ஒருபோதும் செயல்படுத்த முடியாது என்று முதலமைச்சர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், பாஜகவின் ஈகோவை திருப்தி படுத்தவே ஒரே நாடு ஒரே தேர்தல் பரிந்துரை வழங்கப்படுகிறது. வேலையில்லா திண்டாட்டம் விலைவாசி உயர்வு போன்ற பிரச்சினையை தீர்க்க மத்திய அரசு முனைய வேண்டும். ஒரு கட்சியின் ஆசைக்கு ஏற்ப இந்திய ஜனநாயகத்தை வளைக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

நடப்பாண்டு குரூப்-4 தேர்வுக்கான பணியிடங்களை அதிகரிக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

சிபிசிஐடிக்கு மேலும் ஒரு மாதம் அவகாசம்

வேங்கைவயல் விவகாரத்தில் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய மேலும், ஒரு மாதம் அவகாசம் வழங்கி சிபிசிஐடிக்கு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் குடிநீரில் மனித கழிவு கலக்கப்பட்ட சம்பவம் நடந்து இரண்டரை ஆண்டு காலத்தில் 189 நபர்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளது சிபிசிஐடி போலீஸ்.

விருதுநகர் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் தொழிலாளி பலி

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே குகன்பாறை என்ற கிராமத்தில் லட்சுமி என்ற பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் கோவிந்தராஜ் என்ற தொழிலாளி உயிரிழந்தார்.

திருப்பத்தூர் அருகே டெங்கு காய்ச்சலால் சிறுவன் பலி

திருப்பத்தூர் அருகே டெங்கு காய்ச்சலால் 5-ம் வகுப்பு பயிலும் சிறுவன் உயிரிழந்தான். உதயகுமார் – மணிமேகலை தம்பதி மகன் கவியரசுக்கு (9) திடீரென காய்ச்சல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவ பரிசோதனையில் சிறுவன் கவியரசுக்கு டெங்கு காய்ச்சல் இருப்பதாக மருத்துவர் உறுதி செய்தார். மேல் சிகிச்சைக்காக தருமபுரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

திமுக எம்.பி. தயாநிதி மாறன் பதில் மனு தாக்கல்

அவதூறு வழக்கில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்கக் கோரும் காரணங்கள் நியாயமானது என நீதிமன்றம் கருதினால், தனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் தயாநிதி மாறன் எம்.பி பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.

பெண் துண்டு துண்டாக வெட்டி சூட்கேஸில் அடைப்பு

சென்னை துரைப்பாக்கத்தில் இளம்பெண் துண்டு துண்டாக வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்தால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட பெண்ணின் உடலை சூட்கேஸில் அடைத்து வைத்துவிட்டு சென்றுள்ளனர். இந்த வழக்கில், சந்தேகத்தின் பேரில் மணிகண்டன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். சிவகங்கையைச் சேர்ந்த அவர், சூட்கேஸ் வீசப்பட்ட இடத்திற்கு அருகே வசித்து வந்துள்ளார். இவர் ஒருவர் மட்டுமே கொலை செய்தாரா மேலும் சிலர் ஈடுபட்டார்களா என்பது குறித்தும், கொலைக்கான காரணம் குறித்தும் விசாரணை துரைப்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மணலியை சேர்ந்த தீபா 3 நாள்களுக்கு வீட்டிலிருந்து கிளம்பிய நிலையில் இன்று சடலமாக மீட்பு. திருமணமாகாத தீபா பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.