Armstrong Case: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அதிரடி திருப்பம்! காங்.நிர்வாகி அஸ்வத்தாமன் கைது! நீக்குவதாக தலைமை அறிவிப்பு!-bahujan samaj partys armstrong murder case congress leader aswathaman arrested - HT Tamil ,தமிழ்நாடு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Armstrong Case: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அதிரடி திருப்பம்! காங்.நிர்வாகி அஸ்வத்தாமன் கைது! நீக்குவதாக தலைமை அறிவிப்பு!

Armstrong Case: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அதிரடி திருப்பம்! காங்.நிர்வாகி அஸ்வத்தாமன் கைது! நீக்குவதாக தலைமை அறிவிப்பு!

Kathiravan V HT Tamil
Aug 07, 2024 02:32 PM IST

இந்த நிலையில் கைது செய்யப்பட்ட அஸ்வத்தாமனை காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்குவதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி உத்தரவிட்டு உள்ளது.

Armstrong Case: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அதிரடி திருப்பம்! காங்.நிர்வாகி அஸ்வத்தாமன் கைது! நீக்குவதாக தலைமை அறிவிப்பு!
Armstrong Case: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அதிரடி திருப்பம்! காங்.நிர்வாகி அஸ்வத்தாமன் கைது! நீக்குவதாக தலைமை அறிவிப்பு!

இந்த நிலையில் கைது செய்யப்பட்ட அஸ்வத்தாமனை காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்குவதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி உத்தரவிட்டு உள்ளது. 

கைது செய்யப்பட்ட அஸ்வத்தாமன், ஆம்ஸ்ட்ராங்கின் 16ஆவது நாள் நினைவு நாளுக்கு இளைஞர் காங்கிரஸ் சார்பில் இரங்கல் போஸ்டரும் ஒட்டியது விசாரணையில் தெரிய வந்து உள்ளது. 

ஆம்ஸ்ட்ராங் கொலையின் பின்னணி

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5ஆம் தேதி அன்று சென்னை பெரம்பூரில் உள்ள அவரது இல்லம் அருகே கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பேசு பொருள் ஆன நிலையில் தமிழ்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இடமாற்றம் செய்யப்பட்ட சென்னை காவல் ஆணையர்

ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு சம்பவத்திற்கு பகுஜன் சமாஜ் கட்சியின் தேசியத் தலைவர் மாயாவதி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்ததுடன் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டதாக குற்றம்சாட்டினர். 

இந்த நிலையில், கடந்த ஜூலை 8ஆம் தேதி அன்று சென்னை காவல் ஆணையராக இருந்த சந்தீப் ராய் ரத்தோர் மாற்றப்பட்டு, புதிய காவல் ஆணையராக அருண் நியமிக்கப்பட்டார். 

ரவுடிகளுக்கு புரியும் மொழியில் காவல்துறை நடவடிக்கைகளை எடுக்கும் என்றும், சென்னை மாநகரில் குற்றங்களை குறைப்பதே தனது முதல் பணியாக இருக்கும் என்றும் சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் கூறி இருந்தார். 

இதுவரை 20க்கும் மேற்பட்டோர் கைது

இந்த வழக்கு தொடர்பாக இதுவரை 22க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இதில் திருவேங்கடம் என்பவர் என்கவுண்டரில் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

பல்வேறு கட்சியினருக்கு தொடர்பு

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் திமுக, பாஜக, அதிமுக, தமிழ்மாநிலக் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்தவர்கள் இதுவரை கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது இளைஞர் காங்கிரஸ் நிர்வாகியான அஸ்வத்தாமனை போலீசார் கைது செய்து உள்ளனர். 

கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருப்பவர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையில் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகியான அஸ்வத்தாமானை போலீசார் கைது செய்து உள்ளனர். 

ஆம்ஸ்ட்ராங்கின் 16ஆவது நாள் நினைவு நாள் அன்று அஸ்வத்தாமன் இரங்கல் போஸ்டர் ஒட்டி ஆம்ஸ்ட்ராங் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து இருந்ததும் விசாரணையில் தெரிய வந்து உள்ளது. 

யார் இந்த ஆம்ஸ்ட்ராங்க்

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு பிரிவு மாநிலத் தலைவராக ஆம்ஸ்ட்ராங் உள்ளார். இவர் மீது ஏற்கெனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. சில ரவுடி கும்பல் உடன் ஏற்கெனவே முன் விரோதம் இருந்ததாக கூறப்படுகின்றது.

சென்னை பெரம்பூரை சேர்ந்த ஆம்ஸ்ட்ராங் சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரி மாணவர் ஆவார். கடந்த 2008ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டக் கல்லூரி மோதலில், ஆம்ஸ்ட்ராங் இரண்டாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டு இருந்தார். பின்னர் இந்த வழக்கில் இருந்து ஆம்ஸ்ட்ராங் விடுதலை செய்யப்பட்டார்.

கடந்த 2006ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் சென்னையில் சுயேச்சை கவுன்சிலராக ஆம்ஸ்ட்ராங் வெற்றி பெற்று இருந்தார். மேலும் தொடர்ந்து பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராகவும் பணியாற்றி வந்தார்.

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.