தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Sbi Bank Jobs : எஸ்.பி.ஐ. வங்கிப்பணி – 217 காலியிடங்கள் – விண்ணப்பிப்பது எப்படி?

SBI Bank Jobs : எஸ்.பி.ஐ. வங்கிப்பணி – 217 காலியிடங்கள் – விண்ணப்பிப்பது எப்படி?

Priyadarshini R HT Tamil
May 07, 2023 12:44 PM IST

பாரத ஸ்டேட் வங்கி பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதற்கு எழுத வேண்டிய தேர்வுகள் குறித்தும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு எழுத்து மற்றும் நேர்முகத் தேர்வுகளும் நடைபெறவுள்ளது.

கோப்புப்படம்
கோப்புப்படம்

ட்ரெண்டிங் செய்திகள்

காலிப்பணியிடங்கள் விவரம் -

வங்கிப் பணியாளர் – 182

ஒப்பந்த அடிப்படையிலான பணிகள் – 35

மொத்த காலிப்பணியிடங்கள் – 217

தகுதி -

இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிப்போர் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் படிப்பை முடித்திருக்க வேண்டும். இதில் ஒவ்வொரு பணியிடத்துக்கான முன்னுரிமை படிப்புகள் குறித்த விவரங்களைப் பற்றி தெரிந்துகொள்ள எஸ்.பி.ஐ.யின் இணையதளத்தைப் பார்வையிடவும்.

வயது வரம்பு -

பதவி வாரியாக வயது வரம்பை எஸ்.பி.ஐ. குறிப்பிட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களுக்கு அதன் இணையதளத்தைப் பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை -

https://www.sbi.co.in/web/careers/current-openings#lattest என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் பதிவுக்கட்டணமாக ரூ.750ஐ செலுத்தி, தங்களது அடிப்படை விவரங்களைப் பூர்த்தி செய்து விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கலாம். பெண்கள், பட்டியலினத்தவர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

முக்கிய தேதி -

விண்ணப்பங்களை மே 19ம் தேதிக்குள் இணைய வழியில் சமர்ப்பிக்க வேண்டும்.

தேர்வு மையம் -

நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் எழுத்துத் தேர்வு நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, திருநெல்வேலி ஆகிய மையங்களில் தேர்வு நடைபெறும். விண்ணப்பதாரர் தேர்வு எழுதுவதற்கு ஏதேனும் ஒரு தேர்வு மையத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை -

எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

கூடுதல் விவரங்களுக்கு https://bit.ly/3VBLtfe என்ற இணைப்பைப் பார்வையிடவும்.

சமூகவலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான்டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்