தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Rs.161 Crore Scam In Chennai By Claiming To Give High Interest

Chennai : அதிக வட்டி ஆசை காட்டி.. ரூ.161 கோடி மோசடி.. கணவன்-மனைவி அதிரடி கைது!

Divya Sekar HT Tamil
Mar 21, 2023 07:55 AM IST

சென்னையில் அதிக வட்டி ஆசை காட்டி மேலும் ஒரு நிதி நிறுவனம் 3 ஆயிரம் பேரிடம் ரூ.161 கோடி மோசடி செய்த வழக்கில் கணவன்-மனைவி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

கணவன்-மனைவி அதிரடி கைது
கணவன்-மனைவி அதிரடி கைது

ட்ரெண்டிங் செய்திகள்

ரூ.1லட்சம் முதலீடுசெய்தால் மாதம் 10 சதவீதம் லாபத்தில் பங்கு தரப்படும் என்றும் 22 மாதங்களில் முதலீட்டுத் தொகை திருப்பித்தரப்படும், என்றும் அறிவிப்பு வெளியிட்டனர். அதை நம்பி 3 ஆயிரம் பேர் முதலீட்டுத்தொகையை கட்டினார்கள். ரூ.161 கோடியை சுருட்டிய ஆம்ரோ கிங்ஸ் நிறுவனத்தினர் மீது அசோக்நகரைச்

சேர்ந்த சாந்தகுமார் உள்ளிட்ட 3 ஆயிரம் பேர் பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார்களை குவித்தனர். ஐ.ஜி. ஆசியம் மாள் உத்தரவின்பேரில், சூப்பிரண்டு மகேஸ்வரன் மேற்பார்வையில், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

ஆம்ரோ நிறுவனத்தின் தலைவர் மற்றும்மேலாண்மை இயக்குனரான ராஜராஜன், இயக்குனரான அவரது மனைவி முத்துலட்சுமி மற்றும் அவர்களது உறவினர் மறைமலைநகரைச் சேர்ந்த ரஞ்சித்குமார் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். இவர்களது வீடு, அலுவலகங்களில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தி ரொக்கப்பணம், தங்கம், வெள்ளி நகைகளை பறிமுதல் செய்தனர்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்