தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Rain Update: 9 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு! பள்ளிகளுக்கு விடுமுறை

Rain update: 9 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு! பள்ளிகளுக்கு விடுமுறை

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Nov 29, 2022 08:04 AM IST

தேனி, விருதுநகர் மாவட்டங்களில் நேற்று இரவு முதலே தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

9 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல்
9 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல்

ட்ரெண்டிங் செய்திகள்

அந்த வகையில் தேனி, விருதுநகர் மாவட்டங்களில் நேற்று இரவு முதல் நல்ல மழை பெய்து வருகிறது. தற்போது வரை மழை தொடர்ந்து வரும் நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கும், தேனி மாவட்டத்தில் பள்ளிகளுக்கும் இன்று ஒரு நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகம், புதுவையில் வரும் 30ம் தேதி வரை இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

இதையடுத்து, நாளை வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும், சென்னை முதல் நாகப்பட்டினம் வரை அடுத்த 2 நாட்கள் தமிழகத்தின் மேற்கு மற்றும் தெற்கு மாவட்டங்களின் சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

டிசம்பர் 1ஆம் தேதி முதல் டிசம்பர் 4ஆம் தேதி வரையில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் ஈரோடு, சேலம், கோவை, திருப்பூர், நீலகிரி, கரூர், திருநெல்வேலி, ராமநாதபுரம், தூத்துக்குடி, தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி, தென்காசி, மதுரை, விருதுநகர் புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் மழை பெய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து தமிழகத்தில் 3 மணி நேரத்துக்கு, 9 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி நீலகிரி, ஈரோடு, கோவை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

IPL_Entry_Point

டாபிக்ஸ்