தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Senthil Balaji: அமைச்சர் செந்தில் பாலாஜியை அடிக்கடி சந்தித்தாரா சிறைத்துறை டிஐஜி ? - வெளியானது பரபரப்பு தகவல்

Senthil Balaji: அமைச்சர் செந்தில் பாலாஜியை அடிக்கடி சந்தித்தாரா சிறைத்துறை டிஐஜி ? - வெளியானது பரபரப்பு தகவல்

Karthikeyan S HT Tamil
Jul 21, 2023 11:54 AM IST

அமைச்சர் செந்தில் பாலாஜி சிறைத்துறை டிஐஜி அடிக்கடி சந்தித்தாக தகவல் வெளியான நிலையில், சிறைத்துறை விளக்கம் அளித்துள்ளது.

அமைச்சர் செந்தில் பாலாஜி, புழல் சிறை
அமைச்சர் செந்தில் பாலாஜி, புழல் சிறை

ட்ரெண்டிங் செய்திகள்

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையின் பலகட்ட விசாரணைக்கு பிறகு அமைச்சர் செந்தில் பாலாஜி ஜூன் 14-ல் கைது செய்யப்பட்டார். கைது நடவடிக்கையின் போது நெஞ்சுவலி காரணமாக சென்னை ஓமந்தூரர் மருத்துவமனையில் முதலில் அனுமதிக்கப்பட்டு பின்னர் காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அமைச்சர் செந்தில் பாலாஜி சமீபத்தில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தற்போது அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் மத்திய சிறை மருத்துவமனையில் தங்க வைக்கப்பட்டு, மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார்.

இந்த நிலையில், புழல் சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜியை சிறைத்துறை டிஐஜி விதிகளை மீறி அடிக்கடி சந்தித்து வருவதாக சமூகவலைத்தளங்களில் தகவல் வெளியாகி பரபரப்பை கிளப்பி இருந்தது. இந்த விவகாரம் தொடர்பாக சிறைத்துறை விளக்கம் அளித்துள்ளது. அதில், சிறையில் கைதிகளாக இருப்பவர்களை சிறையில் சிறைக்கண்காணிப்பாளர் மற்றும் டிஐஜி ஆகியோர் திடீரென சோதனை செய்யலாம். 

மேலும் சிறை கைதிகளை விசாரணை நடத்தவும் விதிகளும் வழிமுறைகளும் உள்ளன. அதன்படி, அமைச்சர் செந்தில் பாலாஜியை சிறைத்துறை டிஐஜி ஒருமுறை மட்டுமே விதிமுறைகளுக்கு உட்பட்டு சந்தித்துள்ளார். காலை மற்றும் மாலை நடை பயிற்சி மேற்கொள்ளும் போது டிஐஜி கைதிகளை சந்திப்பது வழக்கம் எனவும் சிறைத்துறை விளக்கம் அளித்துள்ளது.

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வசதிகள் நிறைந்த அறை ஒதுக்கப்பட்டு பல்வேறு சலுகைகள் வழங்கப்படுவதாக தகவல் வெளியாகிய நிலையில் அவரை பிற மாநில சிறைக்கு மாற்ற வேண்டும் என்று சமூகவலைத்தளங்களில் கோரிக்கை எழுந்து வருவது குறிப்பிடத்தக்கது. 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்