தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Prize For Best Tamil Books : சிறந்த தமிழ் நூல்களுக்கு பரிசு - விண்ணப்பிக்க அழைப்பு

Prize for Best Tamil Books : சிறந்த தமிழ் நூல்களுக்கு பரிசு - விண்ணப்பிக்க அழைப்பு

Priyadarshini R HT Tamil
Apr 30, 2023 12:24 PM IST

Prize for Best Tamil Books : கடந்த ஆண்டில் தமிழில் வெளியான சிறந்த நூல்களுக்கு பரிசுகள் வழங்கப்படும் என்று தமிழ் வளர்ச்சித் துறை அறிவித்துள்ளது.

கோப்புப்படம்.
கோப்புப்படம்.

ட்ரெண்டிங் செய்திகள்

இதுகுறித்து தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் அருள் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :

2022ம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரை தமிழில் வெளியிடப்பட்ட நூல்கள் 33 பிரிவுகளின் கீழ் போட்டிக்கு வரவேற்கப்படுகின்றன.

போட்டியில் ஒவ்வொரு பிரிவிலும் ஒரு நூல் மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு, நூலாசிரியருக்கு ரூ. 30 ஆயிரமும், அந்த நூலைப் பதிப்பித்த பதிப்பகத்தாருக்கு ரூ.10 ஆயிரமும் பரிசு வழங்கப்படவுள்ளது.

மரபுக்கவிதை, புதுக்கவிதை, புதினம், சிறுகதை, நாடகம் (உரைநடை, கவிதை), சிறுவர் இலக்கியம், திறனாய்வு, மொழி வரலாறு, மொழியியல், மொழி வளர்ச்சி, இலக்கணம், நுண் கலைகள் (இசை, ஓவியம், நடனம், சிற்பம்), அகராதி, கலைக் களஞ்சியம், கலைச் சொல்லாக்கியம், ஆட்சித் தமிழ், பயண இலக்கியம், வாழ்க்கை வரலாறு, தன் வரலாறு, நாட்டு வரலாறு, கல் வெட்டு, தொல்லியல், கடலியலும் வணிக வழிகளும், அகழாய்வு, கணிதவியல், வானியல், இயற்பியல்,வேதியியல்,பொறியியல், தொழில்நுட்பவியல், மானிடவியல், சமூகவியல், புவியியல், சட்டவியல், அரசியல், பொருளியல், வணிகவியல், மேலாண்மையியல், மருந்தியல், விளையாட்டு, மகளிர் இலக்கியம், தமிழர் வாழ்வியல் உள்ளிட்ட ஒவ்வொரு பிரிவுகளிலும் ஒரு புத்தகம் தேர்ந்தெடுக்கப்படும்.

இத்துறையின் வலைதளம் மூலமாக (www.tamilvalarchithur ai.tn.gov.in) போட்டிக்குரிய விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

போட்டிக்கான விண்ணப்பத்துடன் 10 நூற்படிகளும் போட்டிக் கட்டணம் ரூ.100- ஐ 'தமிழ் வளர்ச்சி இயக்குநர், சென்னை' என்ற பெயரில் வங்கிக் கேட்புக் காசோலையாக அளிக்கவேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜூன் 30ம் தேதிக்குள் 'தமிழ் வளர்ச்சி இயக்குநர், தமிழ் வளர்ச்சி வளாகம் முதல்தளம், எழும்பூர், சென்னை' என்ற முகவரிக்கு அனுப்பிவைக்கவேண்டும்.

மேலும் விவரங்களுக்கு 044 28190412, 28190413 என்ற தொலைபேசி எண்களில் தொடர்புகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

Google News: https://bit.ly/3onGqm9

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்