தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Admk Boycotts Vikravandi By-election: ’விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிக்கிறது! ஈபிஎஸ் அறிவிப்பு

ADMK Boycotts Vikravandi By-Election: ’விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிக்கிறது! ஈபிஎஸ் அறிவிப்பு

Kathiravan V HT Tamil
Jun 15, 2024 04:20 PM IST

ADMK Boycotts Vikravandi By-Election: 2009 இல் நடந்த இளையான்குடி, கம்பம், தொண்டாமுத்தூர், பர்கூர், ஸ்ரீவைகுண்டம் ஆகிய 5 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் உட்பட திமுக ஆட்சியில் நடைபெற்ற இடைத் தேர்தல்களையும் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் புறக்கணித்தார்கள் என ஈபிஎஸ் விளக்கம்

ADMK Boycotts Vikravandi By-Election: ’விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிக்கிறோம்!’ அதிமுக பொதுச்செயலாளர் ஈபிஎஸ்
ADMK Boycotts Vikravandi By-Election: ’விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிக்கிறோம்!’ அதிமுக பொதுச்செயலாளர் ஈபிஎஸ்

வரும் ஜூலை 10ஆம் தேதி நடைபெற உள்ள விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

தேர்தலை கண்டு அதிமுக பயப்படவில்லை 

பொதுவாக தேர்தல் என்ற உடனேயே, முதலாவதாகக் களத்தில் இறங்குவது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தான். தேர்தலைக் கண்டு அஞ்சுகின்ற, பயப்படுகின்ற, அச்சப்படுகின்ற இயக்கம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அல்ல என்பதை அனைவரும் நன்கு அறிவர்.

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.