தமிழ் செய்திகள்  /  Elections  /  Vijaya Prabhakaran Contest In Virudhunagar- Release Of Dmdk Candidates List For Parliamentary Elections

Vijaya Prabhakaran: ’விருதுநகரில் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் போட்டி!’ தேமுதிக வேட்பாளர்கள் பட்டியல் இதோ!

Kathiravan V HT Tamil
Mar 22, 2024 02:45 PM IST

”மத்திய சென்னையில் பார்த்தசாரதி, திருவள்லூரில் கு.நல்லதம்பி, கடலூரில் கே.சிவக்கொழுந்து, தஞ்சாவூரில் சிவநேசன் உள்ளிட்டோரும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்”

விஜய பிரபாகரன்
விஜய பிரபாகரன்

ட்ரெண்டிங் செய்திகள்

நாடாளுமன்றத் தேர்தல் 2024

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி அன்று ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த மார்ச் 20ஆம் தேதி நடந்து வருகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் மார்ச் 27 ஆகும். மார்ச் 28ஆம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும் நிலையில், வேட்புமனுக்களை திரும்பப் பெற மார்ச் 30ஆம் தேதி கடைசி நாள் ஆகும். பதிவு செய்யப்பட்ட வாக்குகள் வரும் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.

அதிமுக-தேமுதிக கூட்டணி

நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக உடன் தேமுதிக கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. இதன்படி விருதுநகர், மத்திய சென்னை, திருவள்ளூர், கடலூர், தஞ்சாவூர் ஆகிய 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தன.

இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் இணைந்து வெளியிட்டு இருந்தனர். 

இந்த நிலையில் இதற்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி மத்திய சென்னையில் முன்னாள் எம்.எல்.ஏ பார்த்தசாரதி, திருவள்ளூரில் முன்னாள் எம்.எல்.ஏ கு.நல்லதம்பி, கடலூரில் கே.சிவக்கொழுந்து, தஞ்சாவூரில் சிவநேசன், விருதுநகரில் கேப்டன் விஜயகாந்த்தின் மகன் விஜய பிரபாகரன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

ஏற்கெனவே தேமுதிக சார்பில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கும் போதே தேமுதிக சார்பில் விருதுநகர் தொகுதியில் விஜயபிரபாகரன் போட்டியிட வேண்டும் எனக் கோரி மதுரை மாவட்ட தேமுதிக நிர்வாகிகள் தீர்மானம் நிறைவேற்றி இருந்தனர். 

விருதுநகர் தொகுதி ஏன்?

2008ஆம் ஆண்டு நடைபெற்ற தொகுதி மறுசீரமைப்புக்கு பிறகு சிவகாசி மக்களவைத் தொகுதிக்கு பதிலாக விருதுநகர் மக்களவைத் தொகுதி உருவாக்கப்பட்டது. 

இத்தொகுதியில், மதுரை மாவட்டத்திற்கு உட்பட்ட திருப்பரங்குன்றம், திருமங்கலம் ஆகிய தொகுதிகளும், விருதுநகர் மாவட்டத்திற்கு உட்பட்ட சாத்தூர், சிவகாசி, விருதுநகர், அருப்புக்கோட்டை ஆகிய தொகுதிகளும் இடம் பெற்று உள்ளனர். விஜயகாந்த் சார்ந்த நாயுடு சமூக மக்கள் அதிகம் உள்ள தொகுதியாக விருதுநகர் தொகுதி உள்ளது. 

விருதுநகர் தொகுதியில் 2009ஆம் ஆண்டு முதல் முறையாக நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிட்ட மாஃபா பாண்டியராஜன், 1,25,229 வாக்குகள் உடன் மூன்றாம் இடம் பெற்ற கவனம் பெற்றார். 

கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற தேமுதிக வேட்பாளர் அழகர் சாமி, 3,16,329 வாக்குகளை பெற்று இரண்டாம் இடம் பிடித்து இருந்தார். 

செலிபிரெட்டி தொகுதியாக மாறிய விருதுநகர் தொகுதி!

நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதி செலிபிரெட்டி தொகுதியாக மாறி உள்ளது.  திமுக கூட்டணி சார்பில் விருதுநகர் தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அக்கட்சி சார்பில் சிட்டிங் எம்பியும் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற கொறடாவுமானமாணிக்கம் தாகூரே மீண்டும் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில் பாஜக சார்பில் ராதிகா சரத்குமார் விருதுநகரில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து தேமுதிக சார்பில் கேப்டன் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் வேட்பாளராக களம் இறங்க உள்ளதால் விருதுநகர் தொகுதி கவனம் பெறும் தொகுதிகளில் ஒன்றாக மாறி உள்ளது. 

WhatsApp channel

தொடர்புடையை செய்திகள்