தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  ‘கள் விற்பனை’ விரட்டியடித்த போலீஸ்… பழனி அருகே பரபரப்பு

‘கள் விற்பனை’ விரட்டியடித்த போலீஸ்… பழனி அருகே பரபரப்பு

Priyadarshini R HT Tamil
Apr 03, 2023 11:02 AM IST

Police Action : பழனி அருகே கோடைகால சீசனை பயன்படுத்தி கள் இறக்கி வியாபாரம் செய்தவர்களை போலீசார் விரட்டி அடித்து வைத்திருந்த கள்ளை கீழே ஊற்றி அழித்தனர்.

கோப்புப்படம்
கோப்புப்படம்

ட்ரெண்டிங் செய்திகள்

தொடர்ந்து வியாபாரம் செய்ய வைத்திருந்த கள், பானைகளை பொருட்களை கீழே போட்டுவிட்டு ஓடினர். இதைதொடர்ந்து கள் இறக்கி வைத்திருந்த குடங்களில் இருந்த கள்ளை கீழே ஊற்றி அழித்தனர். மேலும் இதுபோன்று தொடர்ந்து நடந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் எச்சரித்தனர்.

கள் போதை பொருட்கள் பட்டியலில் வருவதால், அது தடை செய்யப்பட்ட ஒன்று. அதை விற்கவவோ, இறக்கவோ தடை விதிக்கப்பட்டுள்ளது. அதையும் மீறி கள் விற்க அனுமதி வேண்டும் என்று கள் இறக்குவோர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், அதற்கு இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை. அதனால், சிலர் திருட்டுத்தனமாக கள் இறக்கி விற்பனை செய்து வருகிறார்கள். அதை சிலர் திருட்டுத்தனமாகச் சென்று அருந்தி வருகிறார்கள். மதுவைப்போலவே கள்ளும் ஒரு போதைப்பொருள் என்பதால் அது தடை செய்யப்பட்டுள்ளது. 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்