தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  ‘மனிதனை மனிதனே இழிவு செய்த கொடுமைகளை உடைத்தெறிந்த ஈரோட்டு பூகம்பம்’ - பெரியார் பிறந்தநாள் .. அரசியல் தலைவர்கள் புகழாரம்!

‘மனிதனை மனிதனே இழிவு செய்த கொடுமைகளை உடைத்தெறிந்த ஈரோட்டு பூகம்பம்’ - பெரியார் பிறந்தநாள் .. அரசியல் தலைவர்கள் புகழாரம்!

Divya Sekar HT Tamil
Sep 17, 2023 11:23 AM IST

தந்தை பெரியாரின் 145வது பிறந்த நாளையொட்டி அரசியல் தலைவர்கள் பலரும் பெரியாருக்கு புகழாரம் சூட்டி வருகின்றனர்.

தந்தை பெரியார் பிறந்தநாள்
தந்தை பெரியார் பிறந்தநாள்

ட்ரெண்டிங் செய்திகள்

அந்த வகையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ”ஈராயிரம் ஆண்டுகளாக சாத்திரம் - சம்பிரதாயமென மனிதனை மனிதனே இழிவு செய்த கொடுமைகளை உடைத்தெறிந்த ஈரோட்டு பூகம்பம். 

மானமும் - அறிவும் மனிதனுக்கு அழகு - சுயமரியாதை வாழ்வே சுக வாழ்வு என பகுத்தறிவு ஊட்டிய சமூக நீதி நாயகர், தந்தை பெரியாரின் 145 ஆவது பிறந்த நாளில் அவர்களது பணிகளை போற்றுவோம். சமூக நீதி நாளான இன்று தமிழ்நாட்டை பண்படுத்திய பெரியாரின் கொள்கைகளை, ஒட்டு மொத்த இந்திய ஒன்றியத்திற்கும் கொண்டு சேர்க்க அயராது உழைப்போம். வாழ்க பெரியார்.” என குறிப்பிட்டுள்ளார்.

தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளத்தில்,”சமூக ஏற்றத்தாழ்வுகளை களையவும், பெண் அடிமைத்தனத்தை ஒழிக்கவும், சாதிய பாகுபாடுகளை அழிக்கவும், மூடநம்பிக்கைக்கு எதிராகவும், பெண் கல்வியை முன்னெடுத்தும் போராடிய புரட்சியாளர், சமூக நீதிக் காவலர், தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாளில் அவர்தம் புகழையும் சுயமரியாதை கொள்கைகளையும் போற்றி வணங்குகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் நீதி மய்யம் கட்சியில் தலைவர் கமல்ஹாசன் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில்,”பிறப்பினால் மனிதர்களில் பேதம் கற்பிப்பது பேரிழிவு என்பதை இறுதிவரை பிரச்சாரம் செய்துவந்தவர் என் பேராசான் பெரியார். கதரை அணிந்தது, கள்ளை எதிர்த்தது, பெண்ணுயர்வு போற்றியது என சகல பரப்புகளிலும் சமர் புரிந்தவர். சமத்துவத்தை சுவாசமாக கொண்டு வாழ்ந்த தந்தை பெரியாரின் பிறந்த நாளில் அவர்தம் சொற்களை நினைவுகூர்கிறேன்”எனக் குறிப்பிட்டுள்ளார்.

காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், "மூடநம்பிக்கை மற்றும் அறியாமை எனும் சங்கிலிகளை உடைப்பதற்கான சாவி 'கல்வி' எனக் கூறியவர் பெரியார். சமூகநீதி, சமத்துவத்திற்காக பாடுபட்ட மாபெரும் சமூக சீர்த்திருத்தவாதி பெரியாருக்கு வீரவணக்கம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்