தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Namakkal : ஆண்கள் மட்டுமே பங்கேற்ற திருவிழா.. 200 க்கும் மேற்பட்ட ஆடுகள்.. 5 ஆயிரம் பேருக்கு மேல் பங்கேற்பு!

Namakkal : ஆண்கள் மட்டுமே பங்கேற்ற திருவிழா.. 200 க்கும் மேற்பட்ட ஆடுகள்.. 5 ஆயிரம் பேருக்கு மேல் பங்கேற்பு!

Divya Sekar HT Tamil
Jul 31, 2023 12:42 PM IST

நாமக்கல்லில் நடைப்பெற்ற கோயில் திருவிழாவில் ஆண்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.

ஆண்கள் மட்டுமே பங்கேற்ற திருவிழா
ஆண்கள் மட்டுமே பங்கேற்ற திருவிழா

ட்ரெண்டிங் செய்திகள்

பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. வழக்கம்போல் இந்த ஆண்டு திருவிழா கடந்த 21ஆம் தேதி வெள்ளிக்கிழமை இரவு பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. நேற்று இரவு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகம், தீபாராதனை நடந்தது. பொங்களாயி அம்மனுக்கு நடந்த பூஜையில் பெண்கள் பங்கேற்கவில்லை. ஆயிரக்கணக்கான ஆண்கள் அம்மனை வழிபட்டு சென்றனர்.

அசைவ அன்னதானம் வழங்குவதற்காக 12 மூட்டை பச்சரிசியை கொண்டு பொங்கல் தயாரித்தனர். அம்மனுக்கு நேர்த்திக் கடன் செலுத்துவதற்காக சேலம், நாமக்கல், விழுப்புரம் உள்பட மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தங்கள் நேர்த்திக் கடனை செலுத்துவதற்காக 200-க்கும் மேற்பட்ட ஆடுகளை கொண்டு வந்து பலியிட்டனர்.

அவ்வாறு பலியிடப்பட்ட ஆடுகளின் இறைச்சிகளை விடிய விடிய சமைத்து இன்று காலை 6 மணி முதல் வழங்கினர். கோவில் வளாகத்தில் இருந்து நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் உள்பட பொதுமக்கள் அசைவ உணவை வாங்கி சாப்பிட்டனர். இதில் ஆண்கள் மட்டுமே கலந்துகொண்டனர். 5 ஆயிரம் பேருக்கு மேல் அசைவ அன்னதானம் வழங்கப்பட்டது.

கடந்த 200 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த திருவிழாவில் பெண்கள் பயன்படுத்தும் பொருளை பயன்படுத்த மாட்டார்கள். மற்றும் கோவில் பொருட்களை பெண்கள் தொடவும் மாட்டார்கள். எந்த சூழ்நிலையிலும் பெண்கள் இந்தப் பகுதிகுள் நுழைவதே இல்லை என்றும் சொல்லப்படுகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்