தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  3-வது நாளாக தொடரும் ஸ்டிரைக் ..பல மடங்காக உயர்ந்த ஓலா, ஊபர் கட்டணம் - பேரதிர்ச்சியில் பயணிகள்!

3-வது நாளாக தொடரும் ஸ்டிரைக் ..பல மடங்காக உயர்ந்த ஓலா, ஊபர் கட்டணம் - பேரதிர்ச்சியில் பயணிகள்!

Karthikeyan S HT Tamil
Oct 18, 2023 08:48 AM IST

Ola, Uber Drivers strike: ஓலா, ஊபர் டாக்ஸி டிரைவர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தின் காரணமாக சேவைக் கட்டணம் அதிரடியாக உயர்ந்துள்ளது.

ஓலா, ஊபர் ஓட்டுநர்கள் 3-வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஓலா, ஊபர் ஓட்டுநர்கள் 3-வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ட்ரெண்டிங் செய்திகள்

ஓலா, ஊபர் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் அடிப்படையில், நாடு முழுவதும் கால் டாக்சிகளை பல ஆயிரக்கணக்கானோர் இயக்கி வருகின்றனர். இதனிடையே, ஓலா, ஊபர் நிறுவனங்கள் வழங்கும் ஊதியம் போதுமானதாக இல்லை என்றும், அந்நிறுவனங்கள் கமிஷன்தொகையை அதிகமாக எடுத்துக் கொள்வதாகவும், அந்நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து கால்டாக்சிகளை இயக்கி வரும் டாக்சி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர்.

இந்த சூழலில் கால் டாக்சிகளுக்கு கட்டணம் நிர்ணயம் உள்ளிட்ட விதிமுறைகளை உருவாக்க வேண்டும், பைக் டாக்சிமுறையை ரத்து செய்ய வேண்டும், கால்டாக்சிகளுக்கு அரசே தனி செயலிஉருவாக்க வேண்டும், வாடகை வாகனங்களை முறைப்படுத்த வேண்டும், மீட்டர் கட்டணம் நிர்ணயம் உள்ளிட்ட 13 அம்சகோரிக்கைகளை வலியுறுத்தி வாடகை வாகன ஓட்டுநர்கள் நேற்று முன்தினம் முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை உட்பட பல்வேறு இடங்களில் கால்டாக்சி ஓட்டுநர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக குறைந்த அளவு கால் டாக்சிகளே இயக்கப்படுகின்றன. இதனால் வழக்கமாக இந்த சேவையை பயன்படுத்தி வந்த பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மேலும், கால் டாக்ஸி கட்டணங்கள் பல மடங்காக அதிகரித்துள்ளதால் பொதுமக்களும், பயணிகளும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

சென்னையில் 400 ரூபாய் வசூலிக்கப்பட்ட 20 கி.மீ, தொலைவிற்கு இன்று ஆயிரம் ரூபாய் கட்டணம் வசூலிப்பதாக பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர். தற்போது இரண்டு மடங்கு வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாகவும் மேலும் கட்டணம் உயரக்கூடும் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. நேற்று, குறைந்தது 50 ரூபாய் முதல் அதிகபட்சமாக 200 ரூபாய் வரை கட்டணம் அதிகரித்திருந்த நிலையில், தற்போது இரண்டு மடங்காக சேவை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. குறைந்தபட்ச ஓட்டுநர்களே டாக்ஸி சேவை அளித்து வரும் நிலையில் கட்டணம் உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்