தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Ignou And Baratiyar : இக்னோ பல்கலை. மாணவர் சேர்க்கை தேதி நீடிப்பு; பாரதியார் பல்கலை. தேர்வு முடிவுகள் வெளியீடு – 2 தகவல்

IGNOU and Baratiyar : இக்னோ பல்கலை. மாணவர் சேர்க்கை தேதி நீடிப்பு; பாரதியார் பல்கலை. தேர்வு முடிவுகள் வெளியீடு – 2 தகவல்

Priyadarshini R HT Tamil
Jul 18, 2023 10:05 AM IST

IGNOU and Bharathiyar University : இந்திரா காந்தி திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் 2023ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. பாரதியார் பல்கலைக்கழக இணைப்பு கல்லூரிகளின் தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. இரு தகவல் ஒரே செய்தியில் படித்து தெரிந்துகொள்ளுங்கள்.

கோப்புப்படம்
கோப்புப்படம்

ட்ரெண்டிங் செய்திகள்

இதுகுறித்து இக்னோவின் மண்டல இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது - தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று குழுவினரால் (NAAC) A++ தர அங்கீகாரம் பெற்ற இந்திய அரசின் கல்வி துறையின் கீழ் இயங்கும் இந்திரா காந்தி தேசியத் திறந்தநிலைப் பல் கலைக்கழகத்தில் இளநிலை, முதுநிலை, பட்டய மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்கு ஜூலை 2023 பருவத்திற்கான மாணவர் சேர்க்கைக்கான கடைசி தேதி ஜூலை 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இப்படிப்புகளில் சேர விரும்புவோர் https://ignouadmission.samarth.edu.in (for ODL Mode Programmes) https: //iop.ignouonline.ac.in (for Online Mode Prorgrammes) இணையதளத்தின் வழியாக விண்ணப்பிக்கலாம். பிஏ (ஜெனரல்), பி. காம் (ஜெனரல்), பிஎஸ்சி (ஜெனரல்) ஆகிய படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் தகுதியுடைய பட்டியலின விண்ணப்பதாரர்களுக்கு கட்டண விலக்கு அளிக்கப்படுகிறது.

 

இந்திராகாந்தி திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் ஜூலை 2023 பருவத்துக்கு மாணவர் சேர்க்கைக்கான கடைசி தேதி ஜூலை 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இக்னோவின் மண்டல இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது - தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று குழுவினரால் (NAAC) A++ தர அங்கீகாரம் பெற்ற இந்திய அரசின் கல்வி துறையின் கீழ் இயங்கும் இந்திரா காந்தி தேசியத் திறந்தநிலைப் பல் கலைக்கழகத்தில் இளநிலை, முதுநிலை, பட்டய மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்கு ஜூலை 2023 பருவத்திற்கான மாணவர் சேர்க்கைக்கான கடைசி தேதி ஜூலை 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இப்படிப்புகளில் சேர விரும்புவோர் https://ignouadmission.samarth.edu.in (for ODL Mode Programmes) https: //iop.ignouonline.ac.in (for Online Mode Prorgrammes) இணையதளத்தின் வழியாக விண்ணப்பிக்கலாம். பிஏ (ஜெனரல்), பி. காம் (ஜெனரல்), பிஎஸ்சி (ஜெனரல்) ஆகிய படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் தகுதியுடைய பட்டியலின விண்ணப்பதாரர்களுக்கு கட்டண விலக்கு அளிக்கப்படுகிறது.

|#+|

மேலும் கூடுதல் விவரங்களுக்கு இணையதளம் - www.ignou.ac.in மின்னஞ்சல் -  rcchennai@ignou.ac.in and rcchennaiadmissions@ignou.ac.in மற்றும் 044-26618040 தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

அலுவல் இணையதளமான www.ignouadmission.samarth.edu.in or www.ignouiop.samarth.edu.in ஆகியவற்றினுள் செல்ல வேண்டும். 

பதிவுசெய்து, விண்ணப்பத்துக்குள் செய்யவேண்டும். 

பதிவு தகவல்களை பூர்த்தி செய்ய வேண்டும். 

தேவையான ஆவணங்களை பதிவேற்றி, கட்டணத்தை செலுத்த வேண்டும். 

விண்ணப்பத்தை சமர்ப்பித்துவிட்டு, கன்பஃபர்மேஷன் பக்கத்தின் ஸ்கிரீன்ஷாட்டை எடுக்க வேண்டும். 

பாரதியார் பல்கலை. இணைப்புக் கல்லூரிகளின் தேர்வு முடிவுகள் வெளியீடு

கோவை பாரதியார் பல்கலைக்கழக இணைப்புக் கல்லூரி மாணவர்களின் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. பாரதியார் பல்கலைக்கழக இணைப்புக் கல்லூரிகளின் மாணவர்களுக்கு கடந்த மே, ஜூன் மாதங்களில் நடைபெற்ற இளநிலை, முதுநிலை பட்டப் படிப்புகளின் தேர்வு முடிவுகள் பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

மறுமதிப்பீடு, மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் ஜூலை 27ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். சிறப்பு துணைத் தேர்வு செப்டம்பர் 3ம் தேதி நடைபெறும். இந்தத் தேர்வுக்கு ஆகஸ்ட் 16ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி (பொ) நா.பொன்பாண்டியன் தெரிவித்துள்ளார்.

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்