தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  காவிரி நதி நீர் வழக்கை விசாரிக்க புதிய அமர்வு- உச்சநீதிமன்றம்

காவிரி நதி நீர் வழக்கை விசாரிக்க புதிய அமர்வு- உச்சநீதிமன்றம்

Pandeeswari Gurusamy HT Tamil
Aug 21, 2023 11:25 AM IST

காவிரி நதி நீர் பங்கீடு குறித்த வழக்கை விசாரிக்க புதிய அமர்வு அமைக்கப்படும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.எய்.சந்திரசூட் திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.

உச்ச நீதிமன்றம் (கோப்புப்படம்)
உச்ச நீதிமன்றம் (கோப்புப்படம்)

ட்ரெண்டிங் செய்திகள்

காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பின் படி, தமிழகத்துக்கு வழங்க வேண்டிய காவிரி நீரை கர்நாடகம் முறையாக வழங்காத காரணத்தால் அண்மையில் நடைபெற்ற காவிரி மேலாண்மை வாரிய கூட்டத்திலிருந்து தமிழக பிரதிநிதிகள் வெளிநடப்பு செய்தனர்.

இந்த நிலையில் தமிழகத்துக்கு காவிரி நதியில் இருந்து உரிய நீரைத் திறந்துவிட வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் கடந்த வாரம் மனு தாக்கல் செய்தது.

இந்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது காவிரி விவகாரம் தொடர்பான வழக்கை விசாரிக்க இன்றே புதிய அமர்வு நியமிக்கப்படும். அந்த அமர்வில் தங்கள் வாதங்களை முன் வைக்கலாம் என தலைமை நீதிபதி சந்திர சூட் அறிவுறுத்தியுள்ளார்.

முன்னதாக, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த நிலையில், பற்றாக்குறை நீரின் அளவு 37.97 டி.எம்.சி.யில் இருந்து தமிழகத்துக்கு 10 டி.எம்.சி. வரை தண்ணீர் வழங்கப்படும் என்று கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக உச்ச நீதிமன்றத்தில் காவிரியில் கர்நாடக அரசு நீர் திறந்து விடக்கோரி தமிழக அரசு சார்பில் கடந்த 14 ஆம் தேதி மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அதில், கடந்த ஜூன் 1 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை 53 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடக அரசு வழங்கியிருக்க வேண்டும். ஆனால் கர்நாடக அரசு இதுவரை 15 டி.எம்.சி. தண்ணீரை மட்டுமே திறந்துவிட்டுள்ளதாகவும், காவிரியில் இருந்து விநாடிக்கு 24 ஆயிரம் கன அடி நீர் திறந்து விட வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

Google News: https://bit.ly/3onGqm9

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்