Top 10 News: ஸ்டாலின் பரப்புரை முதல் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வரை! இன்றைய டாப் 10 செய்திகள் இதோ!
”Morning Top 10 News: காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு முதல் முதலமைச்சர் ஸ்டாலினின் பரப்புரை வரை இன்றைய டாப் 10 செய்திகள் குறித்த விவரங்கள்”
இன்றைய டாப் 10 செய்திகள்
- மதுபான கொள்முதல் முறைகேடு புகாரில் கைது செய்யப்பட்டுள்ள டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 6 நாட்களுக்கு அமலாக்கத்துறை காவலில் வைக்க டெல்லி விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- ஆளுநரை வைத்து தமிழக அரசை மிரட்டுகின்றனர். பாசிச பா.ஜ.க.வை வீழ்த்தி, இந்தியா கூட்டணியின் ஆட்சியை ஒன்றியத்தில் ஏற்படுத்துவதற்காக நடப்பதுதான், இந்த நாடாளுமன்றத் தேர்தல். தேர்தல் என்பதால் பிரதமர், இப்போது இந்தியாவில் இருக்கிறார்; அதனால் அடிக்கடி தமிழ்நாட்டுக்கு வருகிறார். இல்லை என்றால், பெரும்பாலும் வெளிநாட்டில்தான் இருப்பார் என திருச்சி சிறுகனூர் பரப்புரை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
- ஆளுநர் மாளிகையில் இருந்து அழைப்பு வந்தது, அந்த அழைப்பை ஏற்றுக்கொண்டு நாங்கள் நேரடியாகச் சென்று ராஜ்பவனில் பதவிப் பிரமாணத்தை முடித்துவிட்டு, ஒரு மரியாதைக்கு ஆளுநரிடம் பூங்கொத்தைக் கொடுத்துவிட்டு, புறப்படும்போது கூறினேன். இன்றைக்குத்தான் நான் தேர்தல் வேலையைத் தொடங்குகிறேன். தேர்தல் பிரச்சாரத்தை முதன்முதலாக ராஜ்பவனிலிருந்து தொடங்குகிறேன் என்று கூறினேன். அவர் உடனே, ”BEST OF LUCK” என்று சொல்லி அனுப்பினார். ராஜ்பவனிலிருந்து தொடங்கியிருக்கின்ற இந்தப் பயணம் குடியரசுத்தலைவர் மாளிகை வரைக்கும் செல்லப்போகிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
- உச்சநீதிமன்ற கண்டிப்பை தொடர்ந்து பொன்முடிக்கு உயர்க்கல்வித்துறை அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைத்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி.
- அமைச்சர் காந்தியின் வசம் இருந்த கதர் மற்றும் கிராம தொழில் வாரியம், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- மகளிருக்கு மாதம் 3000 ரூபாய் வழங்க மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும். நீட் தேர்வுக்கு பதில் மாற்றுத் தேர்வு முறை கொண்டுவரப்படும், நாடாளுமன்றத் குளிர்கால கூட்டத் தொடரை சென்னையில் நடத்த வலியுறுத்தப்படும், நெல் குவிண்டாலுக்கு 5 ஆயிரம் ரூபாயும், கரும்பு டன்னுக்கு 6 ஆயிரம் ரூபாயும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிமுக நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது.
- விருதுநகரில் ராதிகா, மதுரையில் பேராசிரியர் சீனிவாசன், வடசென்னையில் பால் கனகராஜ், சிதம்பரத்தில் கார்த்தியாயினி, கரூரில் விவி.செந்தில் நாதன் உள்ள்ட்ட 15 பெயர்களை கொண்ட இறுதி கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது.
- பிரதமர் மோடி சொன்னதால்தான் கோவையில் போட்டியிடுகிறேன்; கோவையிலேயே தங்கி இருந்து முதலமைச்சர் பரப்புரை செய்தாலும் பாஜகதான் வெல்லும். ஓட்டுக்கு பணம் கொடுக்கமாட்டேன் என கோயம்புத்தூர் சென்ற பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேட்டி.
- தருமபுரி தொகுதியில் பாமக சார்பில் அன்புமணியின் மனைவி சௌமியா அன்புமணி போட்டியிடுவார் என அக்கட்சி அறிவிப்பு, கடலூரில் இயக்குநர் தங்கர் பச்சான், அரக்கோணத்தில் வழக்கறிஞர் பாலு, திண்டுக்கலில் திலகபாமா, சேலத்தில் அண்ணாதுரை உள்ளிட்டோர் போட்டி.
- நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரையை நாளை திருச்சி வண்ணாந்துறை பகுதியில் இருந்து அதிமுக பொதுச்செயலாளரும். எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தொடங்குகிறார்.
- தமிழ்நாட்டில் நாடளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை காங்கிரஸ் கட்சி இன்று வெளியிட வாய்ப்பு, திருவள்ளூரில் சசிகாந்த் செந்தில், மயிலாடுதுறையில் பிரவீன் சக்ரவர்த்தி, சிவகங்கையில் கார்த்தி சிதம்பரம், விருதுநகரில் மாணிக்கம் தாகூர், கிருஷ்ணகிரியில் செல்லக்குமார், கன்னியாகுமரியில் விஜய் வசந்த், நெல்லையில் பீட்டர் அல்போன்ஸ், கடலூரில் கே.எஸ்.அழகிரி உள்ளிட்டோர் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படலாம் என தகவல்.
டாபிக்ஸ்
மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.