தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  திருமண மண்டபத்தில் மதுவுக்கு அனுமதி உண்டா? கிடையாதா? - அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்

திருமண மண்டபத்தில் மதுவுக்கு அனுமதி உண்டா? கிடையாதா? - அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்

Karthikeyan S HT Tamil
Apr 24, 2023 12:30 PM IST

Minister Senthil Balaji: திருமண மண்டபங்களில் மது அருந்த அனுமதித்து அரசாணை வெளியாகி இருந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்.
அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்.

ட்ரெண்டிங் செய்திகள்

இது தொடர்பாக தமிழ்நாடு அரசின் உள்துறை செயலாளர் பணீந்தர் ரெட்டி வெளியிட்டுள்ள அறிவிப்பில், திருமண மண்டபங்கள், விளையாட்டு மைதானங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் மது அருந்த அனுமதிக்கும் வகையில் சிறப்பு அனுமதி பெற்று மதுபானங்களை பரிமாறலாம். இதற்கான அனுமதியை மாவட்ட ஆட்சியரும், மதுவிலக்கு துணை ஆணையர்கள் வழங்குவார்கள். 

பி.எல் 2எனும் சட்டத்தின் சிறப்பு அனுமதி பெற்று மதுபானங்களை திருமண மண்டபங்கள் மற்றும் விளையாட்டு மைதானங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பரிமாறலாம். இந்த அறிவிப்பு தொடர்பான கட்டுப்பாடுகளில் அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறையினர் தேவைப்படும் பட்சத்தில் கண்காணிக்கலாம் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், திருமண மண்டபங்களில் மது அருந்த ஒருபோதும் அனுமதி வழங்கப்பட மாட்டாது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், திருமண மண்டபங்களில் மதுபானங்களைப் பயன்படுத்த ஒருபோதும் அனுமதியில்லை. சர்வதேச விளையாட்டு போட்டிகள் நடைபெறும் இடங்களில் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் சர்வதேச நிகழ்ச்சிகளில் மதுபானம் அனுமதி நடைமுறையில் உள்ளது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முதலீட்டாளர்கள் பங்கேற்கும் மாநாடுகள், ஐபிஎல் போட்டி போன்ற நிகழ்ச்சிகளில் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்