தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Sattai Duraimurugan Arrest: நாம் தமிழர் கட்சியின் சாட்டை துரைமுருகன் கைது! ஏன் தெரியுமா? இதோ முழு விவரம்!

Sattai Duraimurugan Arrest: நாம் தமிழர் கட்சியின் சாட்டை துரைமுருகன் கைது! ஏன் தெரியுமா? இதோ முழு விவரம்!

Kathiravan V HT Tamil
Jul 11, 2024 09:55 AM IST

Sattai Duraimurugan Arrest: நெல்லை, வீராணம் பகுதியில் உள்ள ஹோட்டலில் தங்கியிருந்த சட்டை துரைமுருகனை திருச்சி சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

Sattai Duraimurugan Arrest: நாம் தமிழர் கட்சியின் சாட்டை துரைமுருகன் கைது!
Sattai Duraimurugan Arrest: நாம் தமிழர் கட்சியின் சாட்டை துரைமுருகன் கைது!

நடந்து முடிந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தலின் போது முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி மற்றும் தமிழ்நாடு அரசு குறித்து அவதூறாக பேசியதாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த கைது நடைபெற்று உள்ளது. 

சாட்டை துரைமுருகன் பேசியது என்ன?

“திமுகவிடம் திமிர்தனம் உள்ளது. திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, ‘நாய்லாம் பி.ஏ பட்டம் வாங்குகின்றது’ என சொல்கிறார். மு.க.ஸ்டாலின், மு.க.அழகிரி கூட பி.ஏ.தான் படித்து உள்ளார். யாரை பார்த்து நாய் என சொல்கிறீர்கள். ஜோதிராவ் பூலே போட்ட வழியில் டிக்டாக், டப் ஸ்மேஷ் செய்தவர்கள்தான் பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோரெல்லாம். ஊரான் பிள்ளைக்கு ஏன் இனிஷியல் போடுகின்றீர்கள். ஐயாயிரம் பேர் கூட இல்லாத குடும்பத்தை சேர்ந்த கருணாநிதியை ஐந்து முறை முதலமைச்சர் ஆக்கியது தமிழர்கள் போட்ட பிச்சை, திருக்குறள் கூட தெரியாத ஒருவரை முதலமைச்சர் ஆக்கியது தமிழர்கள் போட்ட பிச்சை, விளையாட்டுத் தனமாக திரியக்கூடிய ஒருவரை விளையாட்டு துறை அமைச்சர் ஆக்கியது தமிழர்கள் போட்ட பிச்சை. காசு இல்லை எனில் திமுகவினரை கோபாலபுரம் நாய் கூட மதிக்காது, ஆனால் காசு கொடுக்காமல் 38 லட்சம் வாக்குகளை நாம் தமிழர் கட்சி வாங்கி உள்ளது.” என சாட்டை துரைமுருகன் பேசி இருந்தார். 

ட்ரெண்டிங் செய்திகள்

மரண வியாபாரி என விமர்சனம் 

தொடர்ந்து பேசிய அவர், மரண வியாபாரி என்ற பெயர் மறைய நோபல் அவர்கள் நோபல் பரிசை அறிவித்தது போல், கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களின் மரணத்தை மறைக்க மரண வியாபாரி ஸ்டாலின் 10 லட்சம் கொடுக்கின்றார். மேலும் இல்லத்தரசிகளுக்கு ஆயிரம், மாணவர்களுக்கு உரிமை தொகை உள்ளிட்ட திட்டங்கள் மூலம் ஊழலை மறைக்க ஆயிரம் ரூபாய் தரப்படுகின்றது. 

மரண வியாபாரிக்கும், சாராய வியாபாரி ஸ்டாலினுக்கும் எந்த வித்தியாசமும் கிடையாது. இவர்களை தமிழர் நிலத்தில் இருந்து அப்புறப்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது. 100 கோடி ரூபாய் கொடுத்தாலும், நாம் தமிழர் கட்சி காரன் வேறு கட்சிக்கு ஓட்டுப்போட மாட்டான் என துரைமுருகன் பேசி இருந்தார். 

ஏற்கெனவே 2 முறை கைது செய்யப்பட்டவர்

திமுக ஆட்சி அமைந்த பிறகு ஏற்கெனவே இரண்டு முறை சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டு உள்ளார். திருச்சியில் திமுக நிர்வாகி ஒருவரை நேரில் மிரட்டிய புகாரில் கைது செய்யப்பட்ட சாட்டை துரைமுருகன் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதியப்பட்டு இருந்தன. 

மேலும் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள தனியார் செல்போன் உதிரி பாகங்கள் தயாரிக்கும் ஆலையில் நடந்த பெண்கள் போராட்டம் குறித்து உண்மைக்கு புறம்பான செய்தியை வெளியிட்ட புகாரிலும் சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டு இருந்தார். 

இந்த நிலையில் தற்போது விக்கிரவாண்டி பரப்புரை கூட்டத்தில் அவதூறாக பேசிய புகாரில் சாட்டை துரைமுருகனை காவல்துறையினர் கைது செய்து உள்ளனர். 

WhatsApp channel