தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Mhc Adjoured Case Demand To Ban For Tamil Film Producers Council Election

MHC: தயாரிப்பாளர் சங்க தேர்தல் - தேர்தல் அலுவலரை நியமிக்க அவகாசம்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Feb 13, 2023 11:20 PM IST

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலை ரத்து செய்ய கோரி தொடரப்பட்ட வழக்கில் தேர்தல் அலுவலரை நியமிக்க அவகாசம் வேண்டும் என்ற கோரிக்கை ஏற்று வழக்கு விசாரணை நீதிமன்றம் ஒத்துவைத்து உத்தரவிட்டுள்ளது.

தயாரிப்பாளர் சங்க தேர்தல் ரத்து செய்ய கோரி தொடரப்பட்ட வழக்கின் விசாரணையை ஒத்தி வைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
தயாரிப்பாளர் சங்க தேர்தல் ரத்து செய்ய கோரி தொடரப்பட்ட வழக்கின் விசாரணையை ஒத்தி வைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த அறிவிக்கை ரத்து செய்யுமாறும், இதற்கு தடை விதித்து உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தேர்தல் அலுவலராக நியமித்து தேர்தல் நடத்த உத்தரவிட கோரி தயாரிப்பாளர் சங்கத்தின் உறுப்பினர்களாக இருக்கும் கமல் குமார், சீனிவாசன் உள்பட 8 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பிலிருந்து, " சங்க விதிகளின்படி தேர்தல் நடத்தும் அலுவலரை நீதிமன்றம்தான் நியமிக்க வேணடுமே தவிர, தேர்தல் அலுவலரை தயாரிப்பாளர் சங்கமே நியமித்து தேர்தல் நடத்த முடியாது" என்று வாதிடப்பட்டது.

இதையடுத்து வாக்காளர் பட்டியல் முறையாக வெளியிடப்படாமல் தேர்தல் அறிவக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை கேட்ட பின்பு நீதிபதிகள், தயாரிப்பாளர் சங்க தேர்தல் நடத்தும் அலுவலர் யார் என கேள்வி எழுப்பினர். அப்போது தயாரிப்பாளர் சங்க நிர்வாகம் சார்பில், தேர்தல் நடத்தும் அலுவலராக நியக்க இருப்பவர் குறித்து முடிவு செய்து அறிவிக்க அவகாசம் வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை பிப்ரவரி 15ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்