தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Family Planning: 13 குழந்தைகள் - வனப்பகுதிக்குள் ஓடி ஒளிந்த தந்தை!

Family Planning: 13 குழந்தைகள் - வனப்பகுதிக்குள் ஓடி ஒளிந்த தந்தை!

Suriyakumar Jayabalan HT Tamil
Apr 03, 2023 11:35 AM IST

ஈரோடு மாவட்டத்தில் 13 குழந்தைகள் பெற்ற ஆணுக்குக் கருத்தடை அறுவை சிகிச்சை செய்ய மருத்துவக் குழுவினர் சென்றபோது அவர் வனப்பகுதிக்குள் ஓடி ஒளிந்துள்ளார்.

கருத்தடை அறுவை சிகிச்சை
கருத்தடை அறுவை சிகிச்சை

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த தம்பதிக்கு ஏழு மகன்கள் மற்றும் 5 மகள்கள் என மொத்தம் 12 குழந்தைகள் உள்ளனர். அதே சமயம் கடந்த சில நாட்களுக்கு முன்பு 13 ஆவதாக இந்த தம்பதிக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இந்நிலையில் இந்த தம்பதிக்குக் கருத்தடை அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர் முயற்சி செய்துள்ளனர்.

சாந்திக்கு ரத்த சோகை இருக்கின்ற காரணத்தினால் அவருக்குச் சிகிச்சை மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே இதன் காரணமாகச் சின்ன மாதையனுக்கு அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முயற்சி செய்துள்ளனர்.

இதனை மறுத்த சின்ன மாதையன் வனப்பகுதிக்குள் சென்று ஒளிந்து கொண்டார். அறுவை சிகிச்சை செய்ய மருத்துவ குழுவினர் எவ்வளவோ முயற்சிக்கும் அவர்களால் முடியவில்லை. 

அதன் பின்னர் மருத்துவ குழுவினர் அவரிடம், குடும்பக் கட்டுப்பாடு சிகிச்சை செய்து கொள்வதால் எந்த பாதிப்பும் ஏற்படாது. 15 நிமிடங்களில் இந்த சிகிச்சை முடிந்து விடும். இரண்டு, மூன்று நாட்களில் வழக்கம்போல் நீங்கள் வேலைக்குச் சென்றுவிடலாம். உங்கள் குடும்பத்திற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் நாங்கள் செய்து கொடுக்கிறோம் எனத் தெரிவித்துள்ளனர்.

அதன் பிறகு காவல் மற்றும் வருவாய்த் துறையினர் உதவியுடன் பெரும் போராட்டத்திற்குப் பிறகு அறுவை சிகிச்சை செய்யச் சின்ன மாதையன் ஒப்புக்கொண்டார்.

இதனை அடுத்து சின்ன மாதையனுக்கு அந்தியூர் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் கருத்தடை அறுவை சிகிச்சை செய்து முடித்தனர். கருத்தடை என்று சொன்னவுடனேயே சின்ன மாதையன் வனப்பகுதிக்குள் ஒளிந்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பாகப் பேசப்பட்டது.

இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தவுடனேயே மருத்துவ குழுவினர் ஈரோடு அரசு மருத்துவமனையில் குடும்ப நல அறுவை சிகிச்சைக்காகச் சேர்த்துள்ளனர். அப்போது அவர்கள் மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்