தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Madurai High Court's Order On Jallikattu - Caste Names Prohibited

Jallikattu: ’ஜல்லிகட்டில் சாதி பெயர்கள் கூடாது!’ உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி!

Kathiravan V HT Tamil
Jan 04, 2024 03:30 PM IST

“Jallikattu: ஜல்லிக்கட்டு போட்டி தொடங்குவதற்கு முன்பாக தீண்டாமை ஒழிப்பு உறுதி மொழி எடுப்பது தொடர்பாக அரசு பரிசீலனை செய்யவும் உத்தரவு”

ஜல்லிக்கட்டு
ஜல்லிக்கட்டு

ட்ரெண்டிங் செய்திகள்

மதுரை மாநகரை சேர்ந்த செல்வக்குமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி தைமாதம் தொடங்கி பல்வேறு பகுதிகளில் நடந்து வருகிறது. ஜல்லிகட்டு போட்டிகளுக்கு தடை விதித்த பின்னர் சிறப்பு சட்டம் இயற்றி தமிழ்நாட்டு அரசு ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்தி வருகிறது. 2019ஆம் ஆண்டு முதல் ஜல்லிக்கட்டு போட்டிகளை சாதி, மதரீதியாக நடத்தகூடாது, ஜல்லிக்கட்டு போட்டிகளில் ஜாதி பெயரை தவிர்க்க வேண்டும் என நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. 

ஆனால் ஜல்லிக்கட்டு போட்டிகளில் அரசு அதிகாரிகள் முன்பாகவே ஜாதிப்பெயர்களை குறிப்பிட்டு காளைகள் அவிழ்க்கப்படுகிறது. இது உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது. 

இந்த ஆண்டு நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் காளைகளை அவிழ்கும்போது காளைகளின் உரிமையாளர்களின் சாதி பெயர்களை குறிப்பிடக்கூடாது எனவும், ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கும் முன் தீண்டாமை ஒழிப்பு உறுதி மொழியை வாசிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுதாரர் கோரிக்கை வைத்து இருந்தார். 

மனுதாரரின் மனு குறித்து விளக்கம் அளித்த தமிழ்நாடு அரசு வழக்கறிஞர்,  ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவது தொடர்பாக நீதிமன்ற உத்தரவுகளை முறையாக பின்பற்றுவோம் என  உறுதி அளிக்கப்பட்டது. 

அரசு தரப்பு வாதத்தை கேட்ட நீதிபதிகள், காளைகளை அவிழ்க்கும் போது உரிமையாளர்களின் சாதி பெயர்களை சொல்லக்கூடாது என்ற நீதிமன்ற உத்தரவுகளை முறையாக பின்பற்றவும், ஜல்லிக்கட்டு போட்டி தொடங்குவதற்கு முன்பாக தீண்டாமை ஒழிப்பு உறுதி மொழி எடுப்பது தொடர்பாக அரசு பரிசீலனை செய்யவும் உத்தரவிட்டனர். 

WhatsApp channel

டாபிக்ஸ்