தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Madras High Court Said That The Fine Imposed On The Policemen Cannot Be Cancelled

காவலர்களுக்கு அபராதம் - ஒதுங்கிய உயர்நீதிமன்றம்!

Suriyakumar Jayabalan HT Tamil
Feb 25, 2023 01:32 PM IST

Fines For police officers: மனித உரிமை மீறலில் ஈடுபட்ட நான்கு காவலர்களுக்கு மனித உரிமைகள் ஆணையம் விதித்த அபராதத்தை ரத்து செய்ய முடியாது எனச் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்

ட்ரெண்டிங் செய்திகள்

கடந்த 2019 ஆம் ஆண்டு மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த பிரவின் பாபு என்பவர் தனது நண்பர் அசோக் என்பவருடன் டிசம்பர் மாதம் பேருந்து நிலையம் சென்றுள்ளார். அப்போது போக்குவரத்து விதிகளை மீறியதாகக் கூறி பிரவீனை அந்த பணியிலிருந்த காவலர் பாலு தாக்கியுள்ளார்.

இந்த சம்பவத்தை பிரவீன் நண்பர் அசோக் செல்போனில் வீடியோ எடுத்ததால் அவரையும் காவலர் பாலு தாக்கியுள்ளார். பின்னர் இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று மூன்று காவலர்களுடன் சேர்ந்து இருவரையும் கடுமையாகத் தாக்கியுள்ளார்.

காவலர்களால் கடுமையாகத் தாக்கப்பட்ட இருவரும் நீதிபதி முன்பு அவத்திரப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் ஜாமினில் வெளிவந்த இருவரும் இந்த சம்பவம் தொடர்பாக மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இந்த வழக்கை விசாரணை செய்த மனித உரிமைகள் ஆணையம், காவலர்களால் தாக்கப்பட்ட இருவர்களின் மீதும் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளது. எனவே இருவர்களுக்கும் தல ஒரு லட்சம் வழங்க உத்தரவிட்டு இந்த தொகையை நான்கு காவலர்களிடமிருந்தும் வசூல் செய்ய உத்தரவிட்டது.

அதேசமயம் நான்கு காவலர்கள் மீதும் துணை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு மனித உரிமைகள் ஆணையம் பரிந்துரை செய்தது. இதனை எதிர்த்து நான்கு காவலர்களும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கு நீதிபதிகள் வேலுமணி, ஹேமலதா அமர்வில் முன்பு விசாரணைக்கு வந்தது, அப்போது நீதிபதிகள்," போக்குவரத்து விதிகளை மீறியதாக இருவர் மீதும் பொய்யான குற்றச்சாட்டுக் கூறி தாக்குதல் நடத்தியது உறுதியாகத் தெரியவந்துள்ளது. மனித உரிமை மீறலில் காவலர்கள் ஈடுபட்டுள்ளது இதன் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மனித உரிமைகள் ஆணையம் பிறப்பித்த உத்தரவில் தலையிட விரும்பவில்லை" எனக் கூறி மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்