தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  அமைச்சர்கள் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு..3 நாட்கள் தூங்கவில்லை - நீதிபதி அதிருப்தி

அமைச்சர்கள் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு..3 நாட்கள் தூங்கவில்லை - நீதிபதி அதிருப்தி

Karthikeyan S HT Tamil
Aug 23, 2023 12:08 PM IST

Madras HC: சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து தமிழக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் விடுவிக்கப்பட்டதற்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன்.
அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன்.

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த மனுக்களை விசாரித்த நீதிமன்றம் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் உள்ளிட்டோரையும் அவர்களது குடும்பத்தினரையும் விடுவித்து உத்தரவிட்டது. கீழமை நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை மேல் முறையீடு செய்யாத நிலையில், இந்த வழக்கினை தாமாக முன் வந்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரணைக்கு எடுத்துள்ளார். எம்.பி., எம்.எல்.ஏக்களின் மீதான வழக்குகளை விசாரிக்க கூடிய நீதிபதி என்ற முறையில் இந்த நடைமுறையை நீதிபதி பின்பற்றி உள்ளார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆகியோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் கீழமை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை படித்துவிட்டு மூன்று நாட்களாக தூங்கவில்லை என நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

மேலும் நீதிபதி கூறியதாவது, நீதிமன்றத்தின் மனசாட்சியை உலுக்கியதால் தாமாக முன்வந்து இந்த வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதாக குறிப்பிட்டார். மேலும், வழக்கு விசாரணையின் போது பின்பற்றப்பட்ட நடைமுறைகள் தவறானவை. லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளின் நிலைபாடு 2021-க்குப் பிறகு மாறி இருப்பதை காண முடிகிறது. யார் அதிகாரத்திற்கு வந்தாலும் வழக்கை நீர்த்துப்போகவே செய்கின்றனர். உண்மையில் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்குகள் நடத்தப்படும் விதம் எனக்கு அதிர்ச்சி அளிக்கிறது. 

தீர்ப்புகளுக்கு ஒரு வடிவத்தை வைத்துக்கொண்டு தேதியை மட்டும் மாற்றி விடுதலை என தீர்ப்பு வழங்கியுள்ளது தெரிகிறது. நீதிமன்றம் குறிப்பிட்ட ஒரு கட்சிக்கோ, அதில் தொடர்புடையவர்களுக்கோ, அரசுக்கோ உரித்தானது அல்ல, நாட்டில் வாழும் குப்பனுக்கும், சுப்பனுக்கும் உரித்தானது எனத் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், லஞ்ச ஒழிப்புத்துறை செப்டம்பர் 20-க்குள் பதில் மனுத்தாக்கல் செய்ய வேண்டும் எனக் கூறிய நீதிபதி வழக்கை ஒத்திவைத்துள்ளார்.

ஏற்கெனவே சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் பொன்முடியை விடுத்த வேலூர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தாமாக முன் வந்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரணையை தொடங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்