தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  London Girl Wedding: Tumtum For London Girl And Aruppukkottai Boy!

london girl wedding: லண்டன் பெண்ணுக்கும் அருப்புக்கோட்டை பையனுக்கும் டும்டும்!

Pandeeswari Gurusamy HT Tamil
Mar 03, 2023 01:34 PM IST

மந்திரங்கள் ஓத கார்த்திக் இந்து முறைப்படி தாலி கட்டி தனது காதலி கேட்டியா ஒலி வேராவை திருமணம் செய்து கொண்டார்.

லண்டன் பெண்னை மணந்த தமிழக என்ஜினியர்
லண்டன் பெண்னை மணந்த தமிழக என்ஜினியர்

ட்ரெண்டிங் செய்திகள்

விருதுநகர் மாவட்ட அருப்புக்கோட்டை அருகே உள்ளது கடம்பன் குளம் குக் கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் சங்கர். இவரது மனைவி விஜயகுமாரி. இவர்களுக்கு கார்த்திக் என்ற மகன் உள்ளார். கார்த்திக் என்ஜினீயர் பட்டதாரியாவார். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வேலை நிமித்தமாக லண்டனுக்கு சென்றார்.

அப்போது கார்த்திக்கிற்கும் அவருடன் பணியாற்றிய அந்த நாட்டை சேர்ந்த கேட்டியா ஒலி வேரா என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மலர்ந்தது. இதனால் அவர்கள் இருவரும் இந்தியாவில் இந்து முறைப்படி திருமணம் செய்ய முடிவு செய்தனர். இதற்கு அவர்களின் பெற்றோரும் சம்மதம் தெரிவித்தனர். ஆனால் கேட்டியா ஒலி வேராவுக்கு பெற்றோர் உறவினர்கள் இல்லை என தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் இந்து முறைப்படி திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று கேட்டியா ஒலி வேரா தன் காதலனிடம் தெரிவித்துள்ளார். பின்னர் தன் பெயரை மீனாட்சி என்று மாற்றி உள்ளார்.

இந்நிலையில் கார்த்திக்-கேட்டியா ஒலி வேரா திருமணம் இன்று அருப்புக்கோட்டை அருகே வலுக்கலொட்டியில் உள்ள பெருமாள் கோவிலில் நடந்தது. தமிழக முறைப்படி மணமக்கள் மணமேடைக்கு வந்தனர். அங்கு தொடர்ந்து மந்திரங்கள் ஓத கார்த்திக் இந்து முறைப்படி தாலி கட்டி தனது காதலி கேட்டியா ஒலி வேராவை திருமணம் செய்து கொண்டார். 

இதில் கார்த்திக்கின் உற்றார், உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். தமிழக முறைப்படி பட்டுப்புடவை அணிந்து வந்த கேட்டியா ஒலி வேரா நகை பூ என அலங்காரத்தில் ஜொலித்தார். இந்நிலையில் கேட்டியா ஒலி வேரா என்ற மீனாட்சியை பார்த்து திருமணத்திற்கு வந்த மக்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்