தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Tn 12th Result 2023 : அமைச்சரால் தாமதமான தேர்வு முடிவுகள் வெளியீடு - பாடவாரியாக தேர்ச்சி விகிதம் - கூடுதல் விவரம்

TN 12th Result 2023 : அமைச்சரால் தாமதமான தேர்வு முடிவுகள் வெளியீடு - பாடவாரியாக தேர்ச்சி விகிதம் - கூடுதல் விவரம்

Priyadarshini R HT Tamil
May 08, 2023 11:35 AM IST

இதையடுத்து தேர்வு முடிவுகளை இன்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிட்டார். காலை ஒன்பதரை மணிக்கு தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அமைச்சர் வர தாமதமானதால், தேர்வு முடிவுகள் வெளியாவதில் சிறிது தாமதங்கள் ஏற்பட்டது.

கோப்புபப்படம்
கோப்புபப்படம்

ட்ரெண்டிங் செய்திகள்

இதையடுத்து தேர்வு முடிவுகளை இன்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிட்டார். காலை ஒன்பதரை மணிக்கு தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அமைச்சர் வர தாமதமானதால், தேர்வு முடிவுகள் வெளியாவதில் சிறிது தாமதங்கள் ஏற்பட்டது. அமைச்சர் வந்தபின் 10 மணிக்கு மேல் தேர்வு முடிவுகளை அண்ணா நூற்றாண்டு நூலாக்கத்தில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிட்டார்.

www.tnresults.nic.in www.dge1.tn.nic.in www.dge2.tn.nic.in www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்களில் தேர்வு முடிவுகளை மாணவர்கள் அறிந்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வெழுதிய மொத்த மாணக்கர்களின் எண்ணிக்கை : 8,03,385 மாணவியர்களின் எண்ணிக்கை : 4,21,013

மாணவர்களின் எண்ணிக்கை : 3,82,371

தேர்ச்சி விவரங்கள் -

தேர்ச்சிப் பெற்றவர்கள்: 7.55,451 (94.03%)

மாணவியர் 4,05,753 (96.38%) தேர்ச்சி அடைந்துள்ளனர்.

மாணவர்கள் 3,49,697(91.45%) தேர்ச்சி அடைந்துள்ளனர்.

மூன்றாம் பாலினத்தவர் 1 (100.00%) தேர்ச்சி அடைந்துள்ளனர்

மாணவர்களை விட மாணவியர் 4.93% அதிகம் தேர்ச்சிப் பெற்றுள்ளனர்.

கடந்த மே 2022ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்வில்

தேர்வெழுதிய மாணக்கர் 8,06,277, தேர்ச்சிப் பெற்றோர். 7,55,998. தேர்ச்சி சதவிகிதம் 93.76%.

கூடுதல் விவரங்கள் -

மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை 7533

100 % தேர்ச்சிப் பெற்ற மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை 2767.

100% தேர்ச்சிப் பெற்ற அரசு மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை 326.

பள்ளிகள் வாரியாக தேர்ச்சி விகிதம்

அரசுப்புள்ளிகள் - 89.80 சதவீத தேரச்சி பெற்றுள்ளன. அரசு உதவிபெறும் பள்ளிகள் 95.99 சதவீதம் தேரச்சி பெற்றுள்ளன. தனியார் சுயநிதிப் பள்ளிகள் 99.08 சதவீதம், இருபாலர் பள்ளிகள் 94.39 சதவீதம், பெண்கள் பள்ளிகள் 96.04 சதவீதம், ஆண்கள் பள்ளிகள் 87.79 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.

பாடப் பிரிவுகள் வாரியான தேர்ச்சி சதவீதம்

அறிவியல் பாடப் பிரிவுகள் - 96.32 சதவீதம்

வணிகவியல் பாடப் பிரிவுகள் - 91.63 சதவீதம்

கலைப் பிரிவுகள் - 81.89 சதவீதம்

தொழிற்பாடப் பிரிவுகள் - 82.11 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

முக்கியப் பாடங்களில் தேர்ச்சி சதவிகிதம்

இயற்பியல் - 97.76 சதவீதம்

வேதியியல் - 98.31 சதவீதம்

உயிரியல் - 98.47 சதவீதம்

கணிதம் - 98.88 சதவீதம்

தாவரவியல் - 98.04 சதவீதம்

விலங்கியல் - 97.77 சதவீதம்

கணினி அறிவியல் - 99.29 சதவீதம்

வணிகவியல் - 96.41 சதவீதம்

கணக்குப் பதிவியல் - 96.06 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

குறிப்பாக சிறைவாசிகள் 90 பேர் தேர்வு எழுதினர். இதில், 79 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன்படி பார்த்தால், 87.78 சதவீத பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாற்றுத்திறனாளிகள் 4398 பேர் தேர்வு எழுதினர். இதில் 3923 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 89.20 சதவீதம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்