தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Kv School : ஆசிரியர் வேலைக்கு முயற்சிப்பவரா? மதுரை கேந்திரிய வித்யாலயா பள்ளியில் வாய்ப்பு – விவரங்கள் உள்ளே!

KV School : ஆசிரியர் வேலைக்கு முயற்சிப்பவரா? மதுரை கேந்திரிய வித்யாலயா பள்ளியில் வாய்ப்பு – விவரங்கள் உள்ளே!

Priyadarshini R HT Tamil
Jun 23, 2023 11:57 AM IST

KV School : மதுரை திருப்பரங்குன்றத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் தொடக்கப் பள்ளி ஆசிரியர், டி,ஜி.டி. பி.ஜி.டி, ஆகிய பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

கோப்புப்படம்
கோப்புப்படம்

ட்ரெண்டிங் செய்திகள்

நாடு முழுவதும் மொத்தம் 1,245 பள்ளிகள், வெளிநாட்டில் 3 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் என 1248 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. தமிழகத்தில் சென்னை, திருச்சி, மதுரை உள்ளிட்ட இடங்களில் மொத்தம் 59 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் செயல்பட்டுவ வருகின்றன.

இதில் 14.35 லட்சம் மாணவர்கள் படிக்கிறார்கள். இப்பள்ளிகளில் பயிற்று மொழியாக ஆங்கிலமும் இந்தியும் உள்ளது. மத்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில், கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் செயல்படும் இந்த பள்ளிகளில், மிகவும் குறைந்த கட்டணமே வசூலிக்கப்படுகிறது.

புது டெல்லியை தலைமையிடமாக கொண்டு, மண்டலங்கள் பிரிக்கப்பட்டு நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் செயல்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் மதுரையில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் காலியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.

பணி விவரம் -

இந்தி ஆசிரியர் -Primary Teacher (Hindi)

சமஸ்கிருதம் - Trained Graduate Teacher (Sanskrit)

உயிரியியல் ஆசிரியர் PGT (Biology)

பொருளியல் ஆசிரியர் PGT (Economics) ஆகிய பணியிடங்கள் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கல்வித் தகுதி -

பி.எட். முடித்திருக்க வேண்டும். (12th Pass + D.Ed/ JBT/ B.Ed + CTET) இந்த கூடுதல் தகுதிகளும் இருக்க வேண்டும். 

சமஸ்கிருதம் பணிக்கு மூன்றாண்டு கால பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

உயிரியியல் ஆசிரியர் பணியிடத்திற்கு அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

இதற்கு உயிரியியல், விலங்கியல், லைஃப் சயின்சஸ், ஜெனிடின்ஸ் உள்ளிட்ட துறைகளில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பொருளியல் ஆசிரியர் பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

இந்த பணிக்கு விண்ணப்பிக்க பி.எட் படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம் -

இந்தி ஆசிரியர் -Primary Teacher (Hindi) - ரூ.21,250

சமஸ்கிருதம் - Trained Graduate Teacher (Sanskrit) - ரூ.26,250

உயிரியியல் ஆசிரியர் PGT (Biology) - ரூ.27.500

பொருளியல் ஆசிரியர் PGT (Economics) - ரூ.27,500 ஆகியவை மாத ஊதியமாக வழங்கப்படுகிறது. 

இந்த பணிகளிக்கு அதிகபட்ச வயது வரம்பு உள்ளிட்ட தகவல்கள் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளியிடப்படவில்லை. நேர்காணல் அன்று தெரிவிக்கப்படும்.

இதற்கு விண்ணப்பிக்க மதுரையில் நடைபெறும் நேர்காணலில் கலந்துகொள்ள வேண்டும்.

நேர்காணலுக்கு வருபவர்கள் பாஸ்போர்ட் சைஸ் ஃபோட்டோ, கல்வி சான்றிதழ்களின் நகல் ஆகியவற்றுடன் கலந்துகொள்ளவேண்டும்.

நேர்காணல் நடைபெறும் நாள்- 24.06.2023 / சனிக்கிழமை (நாளை) என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

இடம் - கேந்திரிய வித்யாலயா பள்ளி வளாகம், திருப்பரங்குன்றம், மதுரை.

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் உள்ள வேலைவாய்ப்பு பற்றிய விவரங்களை  https://no2madurai.kvs.ac.in/ என்ற இணையதள முகவரியில் தெரிந்துகொள்ளலாம்.

இந்த அறிவிப்பு குறித்த கூடுதல் விவரங்களை https://no2madurai.kvs.ac.in/sites/default/files/WALK%20IN%20INTERVIEW%2024%20JUNE%202023.pdf என்ற இணைப்பில் தெரிந்துகொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்