தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Kovai Agriculture University Certificate Verification For Diploma Candidates

வேளாண் பல்கலை பட்டய படிப்பு சான்றிதழ் சரிபார்ப்பு எப்போது?

Priyadarshini R HT Tamil
Jan 30, 2023 11:49 AM IST

கோவை வேளாண் பல்கலைக்கழக பட்டய படிப்புக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பிப்ரவரி 1ம் தேதியன்று நடைபெறுகிறது.

கோப்புப்படம்.
கோப்புப்படம்.

ட்ரெண்டிங் செய்திகள்

இதில், 2 ஆயிரத்து 25 விண்ணப்பங்கள் மட்டும் தகுதியானவையாக கருதப் பட்டு அதன் தரவரிசை பட்டியல் கடந்த 27ம் தேதி இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இதையடுத்து. இணையதள கலந்தாய்வு நேற்று துவங்கியது. இந்த கலந்தாய்வு இன்றுடன் நிறைவடைகிறது. இந்த கலந்தாய்வில் பங்கேற்க விண்ணப்பதாரர்கள் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. தொடர்ந்து சான்றிதழ் சரிபார்ப்பின்போது கட்டணம் பெற்றுக்கொள்ளப்படும்.

வேளாண் பல்கலைக்கழக இணையதளத்தில் மாணவர்கள் உள்நுழைந்து இன்று மாலை 5 மணி வரை தங்கள் கல்லூரி மற்றும் விருப்பப் பாடங்களை மாற்றிக்கொள்ளலாம். இதில், கடைசியாக உறுதி செய்யப்பட்ட விருப்பம், கல்லூரி மற்றும் பாட இட ஒதுக்கீட்டிற்கு பரிசீலிக்கப்படும். 

இது தொடர்பான விவரங்கள் விண்ணப்பதாரர்களின் மின்னஞ்சலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக நடந்த கலந்தாய்வின் மூலம் தாங்கள் விரும்பிய பாடங்களையும், கல்லூரியையும் தேர்வு செய்து தொடர்ந்து ஆன்லைன் கலந்தாய்வில் பங்கேற்றவர்களுக்கு பிப்ரவரி 1ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் அண்ணா அரங்கில் நடக்கிறது.

இந்த கலந்தாய்விற்கான வழிமுறைகள் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப் பட்டமாணவர்களின் விவரங்கள் www.tnau.ucanapply.com என்ற இணையதளம் மூலமாக தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

IPL_Entry_Point

டாபிக்ஸ்