தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Driver Sharmila: கோவை பெண் ஓட்டுநர் ஷர்மிளாவிற்கு கார் பரிசளித்த கமல்!

Driver Sharmila: கோவை பெண் ஓட்டுநர் ஷர்மிளாவிற்கு கார் பரிசளித்த கமல்!

Pandeeswari Gurusamy HT Tamil
Jun 26, 2023 12:37 PM IST

ஆண்டாண்டு காலமாக அடக்கி வைக்கப்பட்டுள்ள பெண்களின் பக்கம் பண்பட்ட சமூகமாக நிற்க வேண்டும் என்று நடிகர் கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.

ஷர்மிளா
ஷர்மிளா

ட்ரெண்டிங் செய்திகள்

கோவையை சேர்ந்த ஷர்மிளா, காந்திபுரத்தில் இருந்து சோமனூர் செல்லும் வழித்தடத்தில் தனியார் பேருந்தை இயக்கி வந்தார். கோவையின் முதல் பெண் ஓட்டுநரான அவருக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது.

பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் ஷர்மிளாவுக்கு வாழ்த்து தெரிவித்ததுடன், அவர் இயக்கும் பேருந்தில் பயணமும் செய்துள்ளனர்.  கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன், திமுக எம்பி கனிமொழி,  ஆகியோர் ஷர்மிளா இயக்கிய பேருந்தில் பணம் மேற்கொண்டார். இந்நிலையில் கனிமொழி பயணம் செய்த போது காந்திபுரத்தில் இருந்து பீளமேடு வரை பேருந்தில் பயணம் செய்தார். பயணத்தின் போது ஷர்மிளாவுக்கு கனிமொழி எம்பி வாழ்த்துகளை தெரிவித்தார்.

ஓட்டுநர் ஷர்மிளா நீக்கம்

கடந்த மூன்று மாதங்களாக பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வந்த நிலையில் ஷர்மிளாவை பேருந்தின் உரிமையாளர் பணிநீக்கம் செய்துள்ளார். விளம்பரத்திற்காக பயணிகளை ஏற்றுவதாக ஓட்டுநர் ஷர்மிளா உடன் பேருந்து உரிமையாளர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து ஓட்டுநர் ஷர்மிளாவுக்கு ஆதரவு எதிர்ப்பு தொடர்ந்து அதிகரித்து வந்தது. இந்நிலையில் ஓட்டுநர் ஷர்மிளா திடீரென யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்திருந்தார்.

கார் பரிசளித்த கமல்

இந்நிலையில நடிகர் கமல்ஹாசன் ஓட்டுநர் ஷர்மிளாவிற்கு கமல் பண்பாட்டு மையம் சார்பில் கார் ஒன்றை பரிசாக அளித்துள்ளார்.

மேலும் பணியிழந்த நிலையில் தொழில் முனைவோராக ஷர்மிளா செயல்பட கார் பரிசளித்துள்ளதாக கமல் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவர் மீண்டும் ஒட்டுநராக மட்டும் இல்லாமல் தொழில் முனைவோராக மாறுவார் என்று கமல் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து கமல் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் வாடகைக்கு கார் ஓட்டும் தொழில் முனைவராக தனது பயணத்தை ஷர்மிளா மீண்டும் தொடங்க உள்ளார். ஓட்டுநராக மட்டுமே இருந்துவிட வேண்டியவர் அல்ல ஷர்மிளா. இவர் பல்லாயிரம் ஷர்மிளாக்களை உருவாக்க வேண்டியவர் என்பதே என் நம்பிக்கை. ஆண்டாண்டு காலமாய் அடக்கி வைக்கப்பட்ட பெண்கள் தங்கள் தடைகளை உடைத்து தரணி ஆள வருகையில் ஒரு பண்பட்ட சமகமாக நான் அவர்களுக்கு துணை நிற்க விரும்புகிறேன். மகள் ஷர்மிளாவிற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் என்று நடிகர் கமல் ஹாசன் அந்த செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்