தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Judge: நீதிபதியாக பதவியேற்றார் விக்டோரியா கெளரி.. உச்சநீதிமன்ற தீர்ப்பு என்ன?

Judge: நீதிபதியாக பதவியேற்றார் விக்டோரியா கெளரி.. உச்சநீதிமன்ற தீர்ப்பு என்ன?

Manigandan K T HT Tamil
Feb 07, 2023 11:31 AM IST

Supreme court of india: விக்டோரியா கெளரி, பி.பி.பாலாஜி உள்பட 5 பேருக்கு கூடுதல் நீதிபதிகளாக உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம் (HT_PRINT)

ட்ரெண்டிங் செய்திகள்

முன்னதாக, சென்னை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளாக விக்டோரியா கெளரி, பி.பி.பாலாஜி, கே.கே.ராமகிருஷ்ணன், ஆர்.கலைமதி, ஜி.திலகவதி ஆகியோர் பதவியேற்றனர்.

உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

இதற்கிடையே, விக்டோரியா கெளரியை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமித்ததை எதிர்த்து தொடரப்பட்ட மனுவை விசாரணைக்கு உச்சநீதிமன்றம் ஏற்று இன்று விசாரித்தது.

நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, கவாய் அமர்வு, விக்டோரியா கெளரி நீதிபதியாக பதவியேற்க தடை விதிக்க முடியாது என உத்தரவிட்டது.

மேலும், "அரசியல் பின்னணியில் உள்ளவர்கள் ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் நீதிபதியாக பதவி ஏற்றுள்ளனர். விக்டோரியா கவுரி கூடுதல் நீதிபதியாக பதவியேற்கிறார். அவர் தனது கடமையை சரிவர செய்யவில்லை என்றால், நிரந்தர நீதிபதியாக அவரை உயர்த்தாமல் இருக்க கொலீஜியத்திற்கு அதிகாரம் உண்டு" என்று அந்த அமர்வு உத்தரவு பிறப்பித்தது.

முன்னதாக, தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்ஹா, ஜே.பி.பார்திவாலா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில், இந்த மனுவை அவசர விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என மூத்த வழக்கறிஞர் ராஜு ராமச்சந்திரன் கோரினார்.

இது சென்னையின் மூத்த வழக்கறிஞர்களின் அவசர மனு என்று கூறிய அவர், "விக்டோரியா கெளரியின் நியமனத்துக்கு இடைக்கால தடையை எதிர்பார்க்கிறோம். விரைவில் இந்த மனுவை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.

நீதிபதியாக பதவியேற்றுக் கொண்ட விக்டோரியா கெளரி
நீதிபதியாக பதவியேற்றுக் கொண்ட விக்டோரியா கெளரி

இந்த மனுவை பிப்ரவரி 13ஆம் தேதி விசாரணைக்கு பட்டியலிட முதலில் ஒப்புக்கொண்ட நீதிபதிகள் அமர்வு, பின்னர் இன்று விசாரிக்கப்படும் என்று கூறியது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையில் 3 நீதிபதிகள் கொண்ட கொலீஜியம், அலகாபாத், கர்நாடகா, சென்னை உயர்நீதிமன்றங்களுக்கு புதிய நீதிபதிகளை நியமிக்க பரிந்துரை வழங்கியது.

இந்த லிஸ்ட்டில் விக்டோரியா கெளரியும் இருந்தார். அவர் பாஜகவின் மகளிரணி மாநில செயலாளராக இருந்ததாகவும், அவர் சிறுபான்மையினருக்கு எதிராக வெறுப்புப் பிரசாரங்களை செய்ததாகவும் மூத்த வழக்கறிஞர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்