தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  ரூ.25 லட்சம் கேட்டு கொலை மிரட்டல்: பத்திரிகையாளர் வாராகி கைது!

ரூ.25 லட்சம் கேட்டு கொலை மிரட்டல்: பத்திரிகையாளர் வாராகி கைது!

Karthikeyan S HT Tamil
Aug 19, 2023 10:40 AM IST

சென்னையில் மசாஜ் சென்டர் உரிமையாளரிடம் ரூ. 25 லட்சம் பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்ததாக பத்திரிகையாளர் வராகி கைது செய்யப்பட்டுள்ளார்.

வாராகி
வாராகி

ட்ரெண்டிங் செய்திகள்

அந்த புகாரில் சேலையூரில் தான் நடத்தி வரும் மசாஜ் சென்டரை என்னுடன் இணைந்து பார்ட்னராக செயல்பட வேண்டும் என்று பத்திரிகையாளர் வராகி(43) என்பவர் வற்புறுத்தினார். தொடர்ந்து வெவ்வேறு செல்போன் எண்களில் இருந்து தொடர்பு கொண்டு என்னை SPA நடத்த சொல்லி கட்டாயப்படுத்தி வந்தார். பின்னர் கடந்த ஆகஸ்ட் 6-ம் தேதி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் போது மேடவாக்கம் வெள்ளக்கல் சுடுகாடு எதிரே காரில் வந்த வராகி என்னை வழிமறித்து SPA நடத்துவதற்கு ஒப்புக் கொள்ளாமல் இருக்கிறாயா என்றும், நான் சொல்வதை நீ கேட்கவில்லை என்றால் நீ சம்பந்தப்பட்ட வீடியோ ஒன்று என்னிடம் உள்ளது அதை மீண்டும் சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்து உன்னையும் உன் குடும்பத்தையும் அசிங்கப்படுத்தி விடுவேன் என்று மிரட்டியதாகவும், மேலும், எனக்கு ரூபாய் 25 லட்சம் தரவில்லை என்றால் உன்னை குத்தி கொலை செய்து விடுவேன் என்று மிரட்டல் விடுத்தார். இதனால் நான் பயத்தில் வெளியூர் சென்று விட்டேன்.

அதன் பிறகு கடந்த 14.08.2023 அன்று வாராகி என்னை மிரட்டி பொய்யாக பேச சொன்ன வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டு தனக்கும் தன் குடும்பத்திற்கும் அவமானத்தை ஏற்படுத்தி விட்டார். எனவே அவர் மீதும் மற்றும் அவர்கள் நண்பர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கும்படி பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் அளித்த புகாரில் குறிப்பிட்டுள்ளார். புகாரை தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு போலீசார் வாராகியை கைது செய்து அவர் மீது பல்வேறு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்