தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Job Opportunity What Are The Jobs Available In Chennai Defence Sector

Job Opportunity: சென்னை ராணுவ நல வாரியத்தில் வேலை

Priyadarshini R HT Tamil
Feb 13, 2023 12:38 PM IST

சென்னை பல்லாவரம் ராணுவ நல வாரியத்தில் காலியாக உள்ள 28 பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கீழே உள்ள விவரங்களை படித்து தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

கோப்புப்படம்.
கோப்புப்படம்.

ட்ரெண்டிங் செய்திகள்

பணியிடங்கள் விவரம்:

Lower Division Clerk, 1 இடம் (பொது), தகுதி: ஏதேனும் ஒரு பட்டம் மற்றும் ஆங்கிலம் அல்லது தமிழ் அல்லது இந்தி டைப்பிங்கில் லோயர் கிரேடு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சம்பளம்: ரூ.19,500 – ரூ.62,000, 

Secondary Grade Assistant Teacher 4 இடங்கள், (பொது-1, எஸ்டி-1, பொருளாதார பிற்பட்டோர்-1, மாற்றுத்திறனாளி-1), தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் தொடக்கக் கல்வி ஆசிரியர் பயிற்சி படிப்பில் 2 ஆண்டு டிப்ளமோ மற்றும் ஆசிரியர் தகுதி தேர்வில் நேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். சம்பளம்: ரூ.20,600 – ரூ.65,500. 

Plumber, 1 இடம் (பொது), தகுதி: பிளம்பர் டிரேடில் ஐடிஐ தேர்ச்சியுடன் ஓராண்டுக்கு குறையாமல் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் அப்ரண்டிஸ் பயிற்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் 5 ஆண்டுக்கு குறையாமல் பிளம்பிங் தொழிலில் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். சம்பளம்: ரூ.19,500 – ரூ.62,000. 

Mason, 1 இடம் (பொது), தகுதி: மேசன் டிரேடில் ஐடிஐ தேர்ச்சியுடன் ஓராண்டுக்கு குறையாமல் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் அப்ரண்டிஸ் பயிற்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் 5 ஆண்டுகளுக்கு குறையாமல் கட்டிட தொழிலாளியாக பயிற்சி பெற்றிருக்க வேண்டும். சம்பளம்: ரூ.19,500 – ரூ.62,000. 

Electrical Helper, 1 இடம் (பொது), தகுதி: எலக்ட்ரீசியன் அல்லது வயர்மேன் டிரேடில் ஐடிஐ தேர்ச்சியுடன் ஓராண்டுக்கு குறையாமல் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் அப்ரண்டிஸ் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். சம்பளம்: ரூ.18,200 – ரூ.57,900.

Midwife, 1 இடம் (பொது). தகுதி: அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் ஏஎன்எம் படிப்பு அல்லது மல்டி பர்போஸ் ஹெய்த் வொர்க்கர்ஸ் படிப்பில் தேர்ச்சி மற்றும் இந்தியன் நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும். சம்பளம்: ரூ.19,500 – ரூ. 62,000. 

Nursing Orderly, 1 இடம் (முன்னாள் ராணுவத்தினர்). தகுதி: எஸ்எஸ்எல்சி தேர்ச்சியுடன் நர்சிங் உதவியாளர் பயிற்சி படிப்பில் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சம்பளம்: ரூ.15,900 – ரூ. 50,400.

Ayah, 2 இடங்கள் (பொது-1, ஒபிரி-1), தகுதி: 8-ம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி, சம்பளம்: ரூ.15,700 – ரூ.50,000.

Latchi, 1 இடம் (பொது). தகுதி: 8-ம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி. சம்பளம்: ரூ.15,700 – ரூ. 50,000, 

Watchman, 5 இடங்கள். (பொது-3, ஒபிசி-1, முன்னாள் ராணுவத்தினர்-1). தகுதி: 8-ம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி, முன்னாள் ராணுவத்தினராக இருக்க வேண்டும் அல்லது 2 ஆண்டுகளுக்கு குறையாமல் எதாவது ஒரு நிறுவனத்தில் செக்யூரிட்டியாக பணியாற்றியிருக்க வேண்டும்.

Safaiwala, 10 இடங்கள் (பொது-3, ஒபிசி-3, பொருளாதார பிற்பட்டோர்-1, எஸ்டி-1, முன்னாள் ராணுவத்தினர்-1, மாற்றுத்திறனாளி-1), தகுதி: 8-ம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி. வயது: பொது மற்றும் பொருளாதார பிற்பட்டோர் - 21 முதல் 30-க்குள், ஓபிசியினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்சி/ umara யினருக்கு 5 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு ஆண்டுகளும் அதிகபட்ச வரம்பில் 34 அளிக்கப்படும். மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு 

 என்ற இணையதளத்தை பார்க்கவும். 

IPL_Entry_Point

டாபிக்ஸ்